என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கும் நன்றி -ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

ரஜினிகாந்தின் இந்த அருமையான பேச்சு அவரது ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியது. இது அவரது ரசிகர்களுக்கு பெருமையான தருணமாகும். 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 25, 2021, 03:15 PM IST
  • "தாதா சாகேப் பால்கே" விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது
  • இந்த விருதை இயக்குனர் கே. பாலசந்தர் சாருக்கு சமர்ப்பிக்கிறேன்.
  • என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கும் நன்றி.
என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கும் நன்றி -ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

புது டெல்லி: இந்திய சினிமா துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது. சினிமா திரைத்துறையில் நீண்ட காலம் பணியாற்றும் மற்றும் பெருமை சேர்க்கும் சிறந்த நபர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு சார்பில் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இது தேசிய திரைப்பட விருது விழாவில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட திரைப்பட விழாக்களின் இயக்குநரகத்தால் வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ஸ்வர்ணா கமல் (கோல்டன் தாமரை) பதக்கம் மற்றும் ரூ. 1,000,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

கொரோனா காரணமாக விழா தள்ளிவைப்பு:
கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே (Dadasaheb Phalke) விருது நடிகர் ரஜினிகாந்த்துக்கு (Rajinikanth) அறிவிக்கப்பட்டது. ஆனால கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருந்ததால், இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து இன்று டெல்லியில் தேசிய விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. அப்பொழுது நாடு முழுவதிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இன்று நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு (Vice President Venkaiah Naidu) "தாதா சாகேப் பால்கே" விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், எல். முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். மிலேஉம் ராணியின் குடும்பத்தாரும் உடன் இருந்தனர். 

ALSO READ |  வேஷ்டி சட்டையில் விருது பெற்ற தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி!

தமிழக மக்களுக்கும் நன்றி:
"தாதா சாகேப் பால்கே"  விருதை பெற்றப்பிறகு நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், "தாதா சாகேப் பால்கே விருதை வழங்கிய மத்திய அரசுக்கும், எனது ரசிகர்பெருமக்களுக்கும் நன்றி. இந்த விருதை என்னை திரைத்துறையில் அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் கே. பாலசந்தர் (Filmmaker K Balachander) சாருக்கு சமர்ப்பிக்கிறேன். என்னை அடையாளம் காண்பித்த நண்பர் பகதூருக்கும் நன்றி. அவர் இல்லை என்றால், நான் இங்கில்லை. எனக்குள் இருந்த நடிகனை அவன் தான் கண்டுபிடித்து நீ சினிமாவில் நடிக்கப் போ என அனுப்பி வைத்தான். மேலும் இது வரை அளவிட முடியாத அன்பைப் பொழிந்த தனது ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.  இந்த விருதுக்கு காரணமான மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கும் நன்றி ஜெய் ஹிந்த்" என்று பேசினார். ரஜினிகாந்தின் இந்த அருமையான பேச்சு அவரது ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியது. இது அவரது ரசிகர்களுக்கு பெருமையான தருணமாகும். 

 

தாதா சாகேப் பால்கே விருது:
தமிழக அரசின் 6 மாநில விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ள ரஜினி, இன்று திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் பெற்றுள்ளார். இதற்கு முன்பு தமிழ் திரைத்துறையை சேர்ந்த இயக்குநர் பாலச்சந்தர் மற்றும் நடிகர் சிவாஜி கணேசன் மட்டுமே இந்த விருதைப் பெற்றுள்ளனர். அந்தவசையில் தமிழ் சினிமாத்துறை சேர்ந்த மூன்றாவது நபராக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வழங்கப்பட்டது. 

ALSO READ |  இதுவரை தாதாசாகேப் பால்கே விருது வென்றவர்கள்!

இந்திய சினிமாவின் தந்தை:
1969 ஆம் ஆண்டில் முதன்முதலில் வழங்கப்பட்ட இந்த விருது, இந்திய சினிமாவில் தாதாசாகேப் பால்கேயின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரபலமான இயக்குனரான பால்கே (1870-1944), "இந்திய சினிமாவின் தந்தை" என்று அழைக்கப்படுபவர். இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா (1913) ஐ இயக்கினார்.

யார் யார் விருது பெற்றார்கள்:
அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது (National Film Award for Best Actor) நடிகர் தனுசுக்கு வழங்கப்பட்டது. தனுஷ் தேசிய விருது பெறுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது பெற்றிருந்தார். அதேபோல அசுரன் படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் தேசிய விருதை பெற்றார். வெற்றிமாறன் தேசிய விருது பெறுவதும இது இரண்டாவது முறையாகும். மேலும் அசுரன் படத்திற்காக தேசிய விருதை தயாரிப்பாளர் தாணு பெற்றார். 

சிறந்த துணை நடிகருக்கான விருது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்க்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக டி.இமான் அவர்களுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. ஜூரி சிறப்பு விருது பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

ALSO READ |  பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் 'வாசாமி'!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News