காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு மாஸ் விருந்து!! வெளியானது NGK ட்ரைலர்!!

சூர்யா ரசிகர்களுக்கு மாஸ் விருந்து.... என்.ஜி.கே படத்தின் ட்ரைலர் வெளியானது....

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 29, 2019, 07:39 PM IST
காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு மாஸ் விருந்து!! வெளியானது NGK ட்ரைலர்!! title=

சென்னை: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் NGK. இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து திரைக்கு வரத்தயாராக உள்ளது.

அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலை படக்குழு வெளியிட்டனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் கபிலன் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் டீசர் காதலர் தின ஸ்பெஷலாக கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியானது. டீசரும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. என்.ஜி.கே படம் சீக்கிரமாக வெளியிட வேண்டு என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது. என்.ஜி.கே படம் மே 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.

ட்ரைலர்:

 

Trending News