தமிழகத்தை பாலைவனமாக்கும் அரசியல்.... காப்பான் பட Teaser!!

நடிகர் சூரிய நடிப்பில் உருவான காப்பான் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!!

Last Updated : Apr 14, 2019, 07:37 PM IST
தமிழகத்தை பாலைவனமாக்கும் அரசியல்.... காப்பான் பட Teaser!! title=

நடிகர் சூரிய நடிப்பில் உருவான காப்பான் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.

தமிழ்ப்புத்தாண்டையொட்டி படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நேற்று முன் தினம் என்.ஜி.கே பட பாடல் ரிலீசானதை அடுத்து நேற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று டைட்டில் அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தற்போது காப்பான் பட டீசர் வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

Trending News