சூர்யா 42 vs லியோ; மாஸ் காட்டும் சூர்யா; விஜய் சறுக்கல் ஏன்?

ரிலீஸூக்கு முந்தைய பிஸ்னஸில் சூர்யா 42 படம், விஜய்யின் லியோவை விட 100 கோடி ரூபாய் கூடுதலாக வர்த்தகமாகியிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 1, 2023, 03:44 PM IST
சூர்யா 42 vs லியோ; மாஸ் காட்டும் சூர்யா; விஜய் சறுக்கல் ஏன்? title=

சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 13 கெட்டப்புகளில் நடிக்கும் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பட்டானி நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. பான்டசி படமாக சூர்யா 42 உருவாகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவும் தீவிரமாக படப்பிடிப்பில் கவனம் செலுத்து வரும் நிலையில், இந்த படத்திற்கான ரிலீஸூக்கு முந்தயை பிஸ்னஸ் 500 ரூபாய் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மை என்றால் இதுவரை தமிழ் சனிமாவில் எந்தவொரு படத்துக்கும் ரிலீஸூக்கு முந்தைய பிஸ்னஸ் அதிகம் பெற்ற படமாக சூர்யா 42 இருக்கும்.

மேலும் படிக்க | வாரிசு படத்தில் குஷ்பூவின் காட்சிகள் நீக்கப்பட்டதற்கு இதுதான் உண்மையான காரணமா?

விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் லியோ படத்தின் ரிலீஸூக்கு முந்தைய பிஸ்னஸைவிட இதற்கு அதிகம் என்பது தான் பரபரப்பாக பேசப்படும் தகவல். ஏனென்றால், விஜய்யின் லியோ படத்திற்கு சுமார் 400 கோடி ரூபாய் மட்டுமே ரிலீஸூக்கு முந்தைய பிஸ்னஸ் ஆகியுள்ளதாம். அதனை ஒப்பிடும்போது 100 கோடி ரூபாய் கூடுதலாக சூர்யா 42 வர்த்தகமாகியுள்ளது. இது ஒன்றும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் ரசிகர்கள் இப்படியொரு தகவலை சமூக ஊடகளங்களில் கொளுத்திபோட்டுள்ளனர்.

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தளபதி விஜய்யுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே இருவரும் மாஸ்டர் படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றியிருந்தனர். இப்போது இவர்கள் கூட்டணியில் லியோ உருவாகிக் கொண்டிருக்கிறது. பாகுபலி படத்தில் நடித்த சஞ்சய் தத், லியோ படத்தில் நடிப்பது பலரது புருவத்தையும் உயரவைத்துள்ளது. அதுமடும்மல்லாமல் தெலுங்கு, மலையாளம் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மேலும் படிக்க | விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News