தமிழ் திரையுலகை இந்தியாவே திரும்பி பார்க்கிறது - தேசிய விருதாளர்களுக்கு கமல் பாராட்டு

ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் என தேசிய விருது வென்றவர்களுக்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 23, 2022, 02:58 PM IST
  • 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன
  • சூரரைப் போற்று படத்துக்கு 5 விருதுகள்
  • தமிழ் சினிமாக்களுக்கு மொத்தம் 10 தேசிய விருதுகள்
தமிழ் திரையுலகை இந்தியாவே திரும்பி பார்க்கிறது - தேசிய விருதாளர்களுக்கு கமல் பாராட்டு title=

68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு நேற்று வெளியானது. அதில், சூரரைப் போற்று படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த படம் என 5 விருதுகள் கிடைத்துள்ளன. அதேபோல் வசந்த் இயக்கத்தில் வெளியான சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு, தமிழின் சிறந்த படம், சிறந்த துணை நடிகை, சிறந்த படத்தொகுப்பு என 3 விருதுகளும், மண்டேலா படத்துக்கு சிறந்த வசனம், சிறந்த அறிமுக இயக்குநர் என 2 விருதுகளும் கிடைத்துள்ளன. ஆகமொத்தம் தமிழ் சினிமாக்கள் மட்டுமே 10 தேசிய விருதுகளை வென்றுள்ளன.

மேலும் படிக்க | ரொம்ப பெருமையா இருக்கு - விருதுகளை அள்ளிய சூரறைப் போற்றுக்கு தனுஷ் வாழ்த்து

இதனைத் தொடர்ந்து பலரும் தங்களது பாராட்டையும், வாழ்த்தையும் விருது வென்றவர்களுக்கு தெரிவித்துவருகின்றனர். மேலும், தேசிய விருதை தமிழ் சினிமாக்கள் இப்படி கொத்தாக அள்ளி வருடங்கள் ஆகிவிட்டன என கூறி ரசிகர்கள் மகிழ்ச்சியை தெரிவித்துவருகின்றனர்.

 

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | தேசிய விருதை ஜெயமோகனுக்கு சமர்ப்பிக்கிறேன் - வசந்த் நெகிழ்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News