'சொர்க்கத்தில் இணைந்த நண்பர்கள்' உயிரிழந்த செல்ல நாய்... சுஷாந்த் சிங் தங்கை உருக்கமான பதிவு

Sushant Singh Rajput Dog Death: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வளர்ப்பு நாயின் மறைவு செய்தியை அவரின் தங்கை பிரியங்கா சங் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 17, 2023, 01:45 PM IST
  • நானும் அடுத்து வருகிறேன் - சுஷாந்த் தங்கை பதிவு
  • சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் சந்தேகம் நீடிப்பு
'சொர்க்கத்தில் இணைந்த நண்பர்கள்' உயிரிழந்த செல்ல நாய்... சுஷாந்த் சிங் தங்கை உருக்கமான பதிவு title=

Sushant Singh Rajput Dog Death: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020ஆம் ஆண்டு தற்கொலையால் உயிரிழந்தால் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது. அதுதொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

இருப்பினும், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவு மக்களை பெரும் துயருக்கு ஆளாக்கியது. திரையில் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்து தனக்கென சிறப்பான இடத்தை வைத்திருந்த அவரின் திடீர் மறைவை பலராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வசதியும், பிரபலமும் மட்டும் இந்த வாழ்வின் நிறைவை தந்திராது என சுஷாந்த் சிங்கின் மரணம் உணர்த்தியதாக பலரும் இன்றுவரை நினைவுக்கூர்வார்கள். அந்த அளவிற்கு அவர் மறைவின் தாக்கம் இருந்தது. 

மேலும் படிக்க | Connect Movie OTT Release Date: நயன்தாராவின் கனெக்ட்...OTT ரிலீஸ் எப்போ?

இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தங்கை பிரியங்கா சிங் ஒரு துயரமான செய்தியை ட்விட்டரில் பகிரிந்துள்ளார்.  அதில், சுஷாந்த் சிங்கும், அவரும் அவர்களது வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படத்தை இணைத்துள்ளார். 

அதில்,"நீண்ட தூரம் போய்விட்டாய்... நீ உனது நண்பனுடன் சொர்க்கத்தில் இணைந்துவிட்டாய். நானும் அடுத்து வருகிறேன். அதுவரை மிகுந்த கவலையுடன்..." என குறிப்பிட்டு அவர்களது வளர்ப்பு நாய் மறைவு செய்தியை உருக்கமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, சுஷாந்த் சிங்கும், அவரின் நாயும் விளையாடும் வீடியோக்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதன்மூலம், சுஷாந்த் சிங் அவரது நாயுடன் எந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தார் என்பதை உணர்ந்துகொள்ள முடிவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | Netflix நேயர்கள் கவனத்திற்கு! 18 தமிழ் படங்களை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News