அண்ணாச்சி படத்துக்காக களமிறங்கும் 10 கதாநாயகிகள் - பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழா

தி லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் 10 கதாநாயகிகள் பங்கேற்க இருப்பது தான் இப்போதைய கோலிவுட் ஹாட் டாப்பிக்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 27, 2022, 03:33 PM IST
  • தி லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா
  • மே 29 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது
  • தமன்னா உள்ளிட்ட 10 ஹீரோயின்கள் பங்கேற்பு
அண்ணாச்சி படத்துக்காக களமிறங்கும் 10 கதாநாயகிகள் - பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழா title=

கோலிவுட் செய்திகள் தான் பொதுவாக எல்லோரையும் கிறுகிறுக்க வைக்கும். ஆனால், கோலிவுட்டையே அண்மைக்காலமாக கிறுகிறுக்க வைப்பவர் சரவணன் அருள். பிரபல சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள், தங்கள் ஸ்டோர் விளம்பரங்களில் கூட மாடலாக நடித்து அசத்தினார். அதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் தமன்னாவை நடிக்க வைத்து மக்களின் புருவங்களை உயர வைத்தார். இதனால், இவருடைய விளம்பரங்கள் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமடைந்தது.

மேலும் படிக்க | படம் ரிலீஸே ஆகல அதுக்குள்ள ஓடிடி தேதியா? விக்ரம் ஓடிடி ரிலீஸ் தேதி

உடனே, திரைப்படத்துறையில் கால் பதிக்க வேண்டும் ஆசை சரவணன் அருளுக்கு வந்தது. பிரபல இயக்குநர்களிடம் எல்லாம் கதை கேட்டார். கடைசியாக, நடிகர் அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குநர் ஜே.டி.ஜெரியை தேர்ந்தெடுத்தார். இந்தப் படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இமயமலை உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்ட தி லெஜண்ட் படத்தில் விவேக், பிரபு, யோகிபாபு,நாசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். அவரது இசையில் வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், ‘தி லெஜண்ட்’ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 29 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. 

இதில் தென்னிந்தியா முதல் பாலிவுட் வரை கோலோச்சும் முன்னணி நடிகைகளாக இருக்கும் 10 பேரை நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்துள்ளார் சரவணன் அருள். படத்தின் டிரெய்லரையே ராஜமௌலி மற்றும் மணிரத்னம் ஆகியோரை வைத்து வெளியிட்ட சரவணன் அருள், இசை வெளியீட்டு விழா அதைவிட பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக  பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ஊர்வசி ராவ்டேலா, ராய் லட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ லீலா, யாஷிகா ஆனந்த், நுபுர் சனன், டிம்பிள் ஹயாத்தி உள்ளிட்ட நடிகைகள் பங்கேற்க வைத்துள்ளார். 

மேலும் படிக்க | தனுஷுடன் இணையும் ப்ரியங்கா... எந்தப் படத்தில் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News