தமிழ் உணர்வு இருப்பவர்கள் அரசியலுக்கு வரலாம் - கமல் ஹாசன்

Last Updated : May 26, 2017, 02:44 PM IST
தமிழ் உணர்வு இருப்பவர்கள் அரசியலுக்கு வரலாம் - கமல் ஹாசன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.

இன்று விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல் ஹாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

அரசியல் சம்பாதிக்கும் தொழில் அல்ல. அரசியல்வாதிகள் சேவை மனப்பான்மையுடன் இல்லை என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. தற்போதைய அரசியலைப் பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக் கூடாது. 

சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியதில் தவறில்லை, வித்தியாசமானதும் இல்லை. தமிழ் உணர்வு இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நான் இந்தியனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

More Stories

Trending News