பாகுபலி 2 படத்தின் சிறப்பு காட்சி ரத்து?

Last Updated : Apr 27, 2017, 02:13 PM IST
பாகுபலி 2 படத்தின் சிறப்பு காட்சி ரத்து? title=

எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் நாளை வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்க உள்ளது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 2500 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1100 திரையரங்குகளிலும், இதர நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் பாகுபலி 2 வெளியாக உள்ளது. 

இந்நிலையில் இந்தி நடிகர் வினோத் கண்ணாவின் மறைவையொட்டி இன்று இரவு வெளியாக இருந்த பாகுபலி 2 படத்தின் சிறப்பு காட்சி தற்போது ரத்து செய்யப்படுள்ளது. இந்த அறிவிப்பை அப்பாட்டின் தயாரிப்பாளர் கரன் ஜோகர் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பாடிவிட்டு உள்ளார்.

 

 

Trending News