தலைவர் 171 படத்தில் இளைஞராக நடிக்கும் ரஜினி! வெளியானது சுட சுட அப்டேட்..

Thalaivar 171 Update: நடிகர் ரஜினிகா்நத், 171வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவர் இளைஞராக அவதாரம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Feb 3, 2024, 08:02 PM IST
  • லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.
  • இது ரஜினிக்கு 171வது படமாகும்.
  • இதில் அவர் இளைஞராக நடிக்கிறார்.
தலைவர் 171 படத்தில் இளைஞராக நடிக்கும் ரஜினி! வெளியானது சுட சுட அப்டேட்.. title=

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர், தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். 

வேட்டையன் திரைப்படம்:

‘ஜெய்பீம்’ படத்தை இயக்கி புகழ் பெற்றவர் ஞானவேல். இவர் அடுத்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து எடுத்துக்கொண்டிருக்கும் படம், வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுப்டி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரி, சென்னை என பல்வேறு இடங்களில் நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தில் அவர் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்து, ரஜினி லோகேஷ் கனகராஜ்ஜின் திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். 

மேலும் படிக்க | Simbu: சிறுவயதில் செம க்யூட்டாக இருக்கும் சிம்பு..! வைரலாகும் புகைப்படங்கள்..

தலைவர் 171:

கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்பட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்து ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இது அவரது 171வது படமாகும். இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். அன்பரிவ் ஸ்டண்ட் இயக்குநர்கள் சண்டை பயிற்சியாளர்களாக உள்ளனர். 

இளைஞராக நடிக்கும் ரஜினி..

நடிகர் ரஜினிகாந்த், தற்போது தான் நடிக்கும் படங்களில் எல்லாம் தன் வயதுக்கு ஏற்ப, முதுமையான தாேற்றத்திலேயே நடித்து வருகிறார். ஆனால், அந்த கதாப்பாத்திரங்களும் கெத்தான, மாஸான பாத்திரங்களாகவே உள்ளன. உதாரணத்திற்கு, சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தை எடுத்துக்கொள்ளலாம். அதில் நடுத்தர வயது மதிக்கத்தக்க நபராக சில காட்சிகளில் நடித்திருப்பார். இதுவும் சில கிராஃபிக்ஸ் மற்றும் மேக்-அப் உதவியுடன் படம் பிடிக்கப்பட்டிருந்தது. அது தவிர இவர் கடைசியாக இளைஞராக நடித்திருந்த படம், லிங்கா. இதையடுத்து, அவரை தலைவர் 171 படத்தில் இளைஞராக சில காட்சிகளில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

அவரை இளம் வயதில் காண்பிக்க de-aging டெக்னாலஜி உபயோக படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் ரஜினி நடித்திருந்த கபாலி, காலா, எந்திரன் உள்ளிட்ட படங்களில் அவரை இளமையான தோற்றத்தில் காண்பிக்க இந்த டீ-ஏஜிங் டெக்னாலஜி உபயாேகப்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

கதை எழுதி வரும் லோகேஷ் கனகராஜ்..

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 படத்தின் கதை எழுதுவதில் பிசியாக உள்ளார். இதற்காக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். இதையடுத்து அவர், பிரபாஸை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க | சினிமாவில் இருந்து விலகிய விஜய்..கண்கலங்கிய குட்டி ரசிகர்! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News