Viral Video : உலகமே, உணவால்தான் சுழல்கிறது என்று கூறினால், அது மிகையாகாது. ஒவ்வொரு கண்டத்திற்கும், ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு ஊருக்கும், இவ்வளவு ஏன், ஒரு வீட்டில் சமைத்த உணவிற்கும்-இன்னொரு வீட்டில் சமைக்கும் உணவுக்கும் கூட பயங்கர வித்தியாசம் இருக்கும். ஒரு குழந்தைக்கு, தன் வீட்டில் சமைக்கும் உணவு எவ்வளவு மட்டமாக இருந்தாலும் அது அந்த குழந்தைக்கு சுவையாகத்தான் தெரியும். ஆனால், இங்கு ஒரு சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு, ஒரு உணவை எடுத்துக்கொண்டால் அதை அப்படியே சாப்பிட பிடிக்காது. அதனுடன் ஒத்துப்போகாத சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவர். அப்படிப்பட்ட வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:
இந்த வீடியோ, இணைய வாசிகளை மட்டுமல்ல உணவு பிரியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை, “வாந்தி வரும் காம்பினேஷன்” என்று பலர் கூறி வருகின்றனர். இந்த வைரல் வீடியோ, ஆரம்பிக்கும் போது கொஞ்சம் நார்மலாகத்தான் இருக்கிறது. இந்த வீடியோவில் வரும் நபர், முதலில் கையில் சாக்லேட்டை மட்டும்தான் காண்பிக்கிறார். அந்த சாக்லேட்டிற்குள் என்ன இருக்கிறது என அவர் காண்பித்த பிறகுதான், கதையே ஆரம்பிக்கிறது.
முதலில், சாக்லேட்டை ஃப்ரீஸ் செய்து பின்னர் அதில் சில கிரீம்களை ஊற்றும் அவர், அதற்கு மேல் சிக்கன் டிக்கா மசாலாவை வைக்கிறார். பின்னர் அதற்கு மேல், மீண்டும் சாக்லேட்டை வைகிறார். இதை மீண்டும் ஃப்ரீஸ் செய்தவுடன் பிரித்து பார்த்தால் சாக்லேட்டிற்கு நடுவில் சிக்கின் டிக்கா மசாலா இருக்கிறது. இது, துபாய் ஹோட்டல் ஒன்றில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
நெட்டிசன்களின் கருத்து..
இதை பார்த்த நெட்டிசன்கள், விதவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். அனைவரும் வாந்தி வரும் இமோஜியை இதில் கமெண்ட் செய்திருக்கின்றனர். இன்னும் சிலர் பிடிக்காத நபர்களை இதில் டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | பூனையை தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடும் தமிழ் குடும்பம்! வைரல் வீடியோ..
மேலும் படிக்க | ரயிலுக்கு வெளியில் தலையை நீட்டிய பெண்..அடுத்து நடந்த பயங்கரத்தை நீங்களே பாருங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ