மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி சமீபத்தில் வெளியான கனா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் "கௌசள்யா கிருஷ்ணமூர்த்தி" வரும் ஆகஸ்ட் 23-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!
மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில், நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அவருக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்திருந்தார். கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் தமிழ் படம் இதுவே.
இந்தப்படத்தில் தந்தை - மகள் உறவு சம்பந்தப்பட்ட வாயாடி பெத்த புள்ள என்கிற பாடலை வைக்கம் விஜயலட்சுமியுடன் இணைந்து சிவகார்த்திகேயனும் அவரது நான்கு வயது மகள் ஆராதனாவும் பாடியுள்ளனர். இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. பாடல்களுடன் சேர்ந்து படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தினை தெலுங்கு மொழியில் ரீமேக் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கௌசள்யா கிருஷ்ணமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். பெஞ்சமீன் சினிவாச ராவ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். தீப்பு நின்னா தாமஸ் இசையமைக்க, கோதகிரி வெங்கடேஷ ராய் படத்தொகுப்பு செய்கின்றார்.
The Inspiring journey of #KousalyaKrishnamurth ng screens on 23rd August.#KKMonAug23 @aishu_dil #RajendraPrasad #KarthikRaju @iandrewdop @ksramarao45 @KA_Vallabha @Siva_Kartikeyan #BheemaneniSrinivasaRao @SonyMusicSouth pic.twitter.com/7agfUX55Uj
— Creative Commercials (@CCMediaEnt) August 2, 2019
இந்நிலையில் இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.