ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'மானிகர்னிகா' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று திரையை எட்டியது.
இத்திரைப்படத்தில் கங்கனா ரெனாவட் முன்னணி பாத்திரத்தில் நடித்திருந்தார், 1857 கலகத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்த ராணி லக்ஷ்மிபாயின் அச்சமற்ற ஆக்கிரமிப்பினை திரையில் உயிருடன் கொண்டுவந்தார் கங்கனா ரெனாவட். இந்திய சுதந்திரத்திற்கு முக்கிய புள்ளியாய் அமைந்த இந்த கலகத்தினை சுதந்திரத்தின் முதல் போர் என்று பலர் கருதுகின்றனர்.
ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 1854-ஆம் ஆண்டில் ராணி லக்ஷ்மிபாய் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக சட்டரீதியான எதிர்ப்பினை வெளிப்படுத்தி இந்திய சுதந்திரத்திற்கான முதல் குரல் எழுப்பினார். இது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கிழக்கிந்திய கம்பனியின் கட்டுப்பாட்டின் கீழ் ஜான்சி-யை கொண்டுவர ஆங்கிலேயர்கள் என்னியபோது, ஆஸ்திரேலியா நாட்டு வழக்கறிஞர் ஜான் லாங் உதவியுடன் கிழக்கிந்திய கம்பனிக்கு எதிராக லக்ஷ்மிபாய் மனு ஒன்றை 1854-ஆம் ஆண்டில் தாக்கல் செய்தார்.
லக்ஷ்மிபாய்-க்கு உதவி செய்த ஜான் லாங், இந்தியாவில் பணியாற்றிய ஆஸ்திரேலியா நாட்டு வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக 'The Mofussilite' என்னும் பத்திரிக்கையினை வெற்றிகரமாக நடத்தி வந்தவர்.
Rediff கட்டுரையின் படி, ஜான் லாங் அவரது இந்திய அனுபவத்தைப் பற்றி சார்லஸ் டிக்கின்னின் 'Household Worlds' பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.
ஜான் லாங் தனது பணி காலத்தின் போது, ஒரு இந்திய வர்த்தகருக்கு ஆதரவாக வழக்கு தொடுத்து கிழக்கிந்திய கம்பெனியிடன் இருந்து ரூ .50 லட்சத்தை பெற்று தந்துள்ளார். இந்த சம்பவம், ராணி லக்ஷ்மியின் பார்வைக்கு ஜான் லாங்-கை கொண்டு சென்றுள்ளது. பின்னர் லாங் உதவியுடன் ஜான்சியின் சட்டரீதியான போராட்டம் துவங்கியுள்ளது.
எனினும் ஜான் லாங் தாக்கல் செய்த மனு, பிரிட்டிஷ் நீதிமன்றத்தால் வெறும் ஏழு நாட்களில் நிராகரிக்கப்பட்டது.
இந்த வரலாற்றினை உலகம் அறிய செய்ய வேண்டும் என என்னிய பிரதமர் மோடி அவர்கள், தனது 2014-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டு சுற்றுப்பயணத்தின் போது, ஜான் லாங் தாக்கல் செய்த மனுவினை அந்நாட்டு பிரதமர் டோனி அபோட்டிடன் அளித்தார். அத்துடன், மசோரி தேவாலயத்தில் ஜான் லாங் திருமணம் செய்துக்கொண்ட சான்றிதழினையும், ஜான் லாங்கின் புகைப்படங்கள் தொகுப்பினையும் அளித்தார்.
பிரதமர் மோடியில் இந்த பரிசு, ஜான் லாங்கிற்கு செய்யப்படும் ஒரு மரியாதையாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் பிறந்த ஜான் லாங்., ஆஸ்திரேலியாவின் முதல் நாவல் ஆசிரியர் என அழைக்கப்படுகின்றார். ஜான்சி ராணியின், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் ஜான்சிக்கு உதவி செய்த ஜான் லாங் அந்நாள் முதல் இந்தியாவின் நண்பராகவே கருதப்படுகின்றார்.