அவதார் கதாபாத்திரங்களாக மாறிய தியேட்டர் ஊழியர்கள்

புதுச்சேரி - கடலூர் சாலையில் இருக்கும் திரையரங்கின் ஊழியர்கள் அவதார் 2 படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் வேடம் அணிந்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 18, 2022, 06:24 PM IST
  • அவதார் 2 படம் கடந்த 16ஆம் தேதி வெளியானது
  • படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது
  • திரையரங்கு ஊழியர்கள் அவதார் 2 கதாபாத்திரங்களாக மாறியிருக்கின்றனர்
அவதார் கதாபாத்திரங்களாக மாறிய தியேட்டர் ஊழியர்கள் title=

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளிவந்து உலக அளவில் சினிமா ரசிகர்களை வியக்க வைத்த ஒரு படம் 'அவதார்'. இப்படி ஒரு சயின்ஸ் - பிக்ஷன் படமா என படத்தைப் பார்த்து அப்போது வியக்காதவர்களே இல்லை. அப்படத்தின் இரண்டாம் பாகமான 'அவதார் - த வே ஆப் வாட்டர்' படம் உலக அளவில் கடந்த 16ஆம் தேதி வெளியானது. தமிழ் உள்ளிட்ட 160 மொழிகளில் படம் வெளியாகியிருக்கிறது முதல் பாகம் அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றிருந்த சூழலில் அவதார் 2 கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும் அவதார் 1 வேறு உலகத்தில் இருந்ததுபோன்று இருந்தது. ஆனால் அவதார் 2 சராசரி சினிமா என்ற வட்டத்திற்குள் வந்துவிட்டதாக பலரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களை கவரும் நோக்கத்தில் புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள தனியார் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்கள் அவதார் படத்தில் வரும் கதாபாத்திரம் போல் வேடம் அணிந்து தியேட்டருக்கு வரும் ரசிகர்களை வரவேற்கின்றனர். மேலும் அவதார் போல் வேடம் அணிந்து உள்ளவர்களிடம் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.

முன்னதாக அவதார் 2 படமா படத்தின் டிக்கெட்டுகளின் விலை வழக்கத்தைவிட சற்று கூடுதலாக உள்ளது என கூறப்படுகிறது. இருப்பினும், மக்கள் இப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் வெளியாகி இன்றோடு மூன்று நாள்கள் ஆகிவிட்ட நிலையில், இந்திய அளவில் கடந்த இரண்டு நாள்களில் இப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Avatar 2

அதன்படி அவதார் 2 திரைப்படம் வெளியான இரண்டு நாள்களில் மட்டும் மொத்தம் ரூ. 100 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக திரைத்துறை வணிக ஆய்வாளரான ரமேஷ் பாலா ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். 

மேலும் படிக்க |  அஜித்தைவிட லெஜண்ட் அண்ணாச்சிதான் ஒசத்தி - விஜய்யிடம் பணம் வாங்கினாரா ப்ளூசட்டை மாறன்?

முன்னதாக, இந்தியாவில் முதல் நாளில் மட்டும் ரூ. 41 கோடி வசூலித்த அவதார் 2, தற்போது ரூ. 100 கோடியை தாண்டி அசத்தியுள்ளது. மேலும், இந்த வார இறுதியில், ரூ. 135 கோடி முதல் ரூ. 140 கோடிவரை அவதார் 2 வசூலிக்க வாய்ப்புள்ளது என்றும், இதேபோன்று சென்றால், ஒரே வாரத்தில் இந்தியா முழுவதும் ரூ. 300 கோடி வசூலித்து பெரும் சாதனையை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் மூலம், இந்தியாவில் இந்தாண்டு பெரும் வெற்றி பெற்ற ஆர்ஆர்ஆர், பிரம்மாஸ்தரா படங்களின் முதல் இரண்டு நாள் சாதனையை அவதார் 2 திரைப்படம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News