நான் ராஷ்மிகாவை காதலிக்கிறேனா... பளீச்சென்று பதில் சொன்ன நடிகர்!

Rashmika Mandanna: தானும், நடிகை ராஷ்மிகாவும் காதலிப்பதாக வெளியாகும் தகவல் குறித்து தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் பதில் அளித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : May 5, 2023, 12:18 AM IST
  • பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் தற்போது இந்தியில் அறிமுகமாகிறார்.
  • அப்படத்திற்கு சத்ரபதி என பெயரிடப்பட்டது.
  • இது ராஜமௌலியின் சத்ரபதி படத்தின் இந்தி ரீமேக்காகும்.
நான் ராஷ்மிகாவை காதலிக்கிறேனா... பளீச்சென்று பதில் சொன்ன நடிகர்! title=

Rashmika Mandanna: தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பொதுவெளியில் ஒன்றாக இருக்கும் வகையிலான சில போட்டோகள் வெளியான நிலையில், அவர்களின் டேட்டிங் வதந்திகள் எழுந்தன. கடந்த சில மாதங்களாக, விமான நிலையம் மற்றும் விருது நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இருவரும் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், இப்போது, நடிகர் சாய் ஸ்ரீனிவாஸ் வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார். 

இதுபோன்று எப்படி வதந்திகள் பரப்பப்படுகின்றன என அவர் தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார்.  தற்போது தனது முதல் இந்தி படமான சத்ரபதியை விளம்பரப்படுத்தி வரும் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், ராஷ்மிகா மந்தனாவுடனான டேட்டிங் வதந்திகளுக்கு பதிலளித்தார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர்,"இதுபோன்ற வதந்தி எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை, இது முற்றிலும் ஆதாரமற்றது.  

நல்ல நண்பர்கள் 

ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம்  நாங்கள் உண்மையில் விமான நிலையத்தில் திடீரென ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டோம். நாங்கள் இருவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள், நாங்கள் மும்பையில் இருந்து இங்கு தொடர்ந்து வருகிறோம். எனவே, ஒருவருக்கொருவர் அடிக்கடி சந்தித்துக்கொள்வது போன்று உள்ளது. ஆனால் விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவதை அவர்கள் ஓரிரு முறை பார்த்திருக்க கூட வாய்ப்பில்லை. இந்த விஷயம் இவ்வளவுதான்" என்றார். 

மேலும் படிக்க | விவேக் முதல் மனோபாலா வரை..! தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் மரணங்கள்!

அவர் ராஷ்மிகாவை துடிப்பான நபர் என்றார். ராஷ்மிகாவை பாராட்டிய அவர்,"எப்போதும் அந்த எனர்ஜியாக இருங்கள். அந்த ஆற்றலை எப்போதும் கொண்டு வாருங்கள். அவர் ஒரு அறையில் இருக்கும்போதெல்லாம், அவள் நிறைய எனர்ஜியைக் கொண்டுவருகிறார். அவர் மிகவும் துடிப்பான நபர், அவர் அதை இழக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்" என்றார். 

இந்தி ரீமேக்

செவ்வாயன்று, சத்ரபதியின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. முழுமையான ஒரு ஆக்‌ஷன் என்டர்டெயின்னர் என்று உறுதியளிக்கிறது. இது பிரபாஸ் மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிளாக்பஸ்டர் தெலுங்கு படத்தின் சத்ரபதியின் அதே பெயரில் வெளியாகும் இந்தி ரீமேக் ஆகும். 

மொழி மாற்றம் மற்றும் வித்தியாசமான நட்சத்திரப் பட்டாளத்துடன் இந்தப் படம் தெலுங்குப் படத்தின், அச்சு அசலை போலவே தெரிகிறது. ஒரிஜினலுக்கு கதை எழுதிய ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், ரீமேக்கின் திரைக்கதையையும் எழுதியுள்ளார். இந்தி ரீமேக்கில் இயக்குநராக விவி விநாயக் பிடித்துள்ளார். நுஷ்ரத் பருச்சா படத்தின் கதாநாயகி.

மேலும் படிக்க | ஊர்காவலன் படத்தின் போது மனோபாலா செய்தது என்ன? ரஜினி எப்படி இம்பிரஸ் ஆனார்?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News