எளிமையாக நடந்து முடிந்த "பட்டாஸ்" படத்தின் இசை வெளியீட்டு விழா

எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மிகவும் எளிமையாக நடந்து முடிந்த "பட்டாஸ்" படத்தின் இசை வெளியீட்டு விழா.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Dec 28, 2019, 02:06 PM IST
எளிமையாக நடந்து முடிந்த "பட்டாஸ்" படத்தின் இசை வெளியீட்டு விழா
Pic Courtesy : Twitter

"கொடி" பட இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் "பட்டாஸ்" (Pattas). இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மிகவும் எளிமையாக சூரியன் எப்.எம் அலுவலகத்தில் படக்குழுவினர் நடத்தி முடித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கலந்துக்கொள்ளவில்லை. ஆனால் இயக்குனர், இசை அமைப்பாளர் உட்பட சிலர் கலந்துக்கொண்டனர். 

இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கின்றார். புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பின்னர் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் திரைப்படம் இதுவாகும். இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கை கோர்த்துள்ளனர். ஒரசாத பாடல் புகழ் விவேக் - மெர்வின் இசையில் இந்த திரைப்படத்தை சத்யஜோதி ப்ளிம்ஸ் தயாரிக்கின்றது.

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பட்டாஸ்’ என்ற டைட்டிலுடன் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. அந்த பர்ஸ்ட் லுக் தனுஷின் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு அமைந்தது.

ஏற்கனவே சில் ப்ரோ, மொரட்டு தமிழன்டா, ஜிகிடி கிள்ளாடி என படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் தான் மிகவும் எளிமையாக இசை வெளியீட்டு விழாவை நடத்தி உள்ளனர் படக்குழு.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.