விஜயின் சிங்கப்பெண்ணே பாடலுக்காக பொங்கி எழுந்த Youtube!

இயக்குநர் அட்லி - விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் திரைப்படம் பிகில். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Updated: Jul 24, 2019, 09:42 AM IST
விஜயின் சிங்கப்பெண்ணே பாடலுக்காக பொங்கி எழுந்த Youtube!
Representational Image

இயக்குநர் அட்லி - விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் திரைப்படம் பிகில். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல், இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் உட்பட படக்குழு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இதையடுத்து இந்த பாடலை ஜுலை 23-ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் சிங்கப்பெண்ணே பாடலை பெரிய லெவலில் ஹிட் அடிக்க வேண்டும் என்று வெறித்தனமாக காத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் அந்த பாடல் நீண்ட நேரமாக வெளியாகாமல் எதிர்பார்பினை மேலும் தூண்டியது. மீம்ஸ் கிரியேட்டர்கள் பல்வேறு மீம்களை வெளியிட்டு கலாய்த்துக்கொண்டிருந்தனர். இதற்கிடையில் யு டுயூப் நிறுவனத்தின் (இந்தியா) டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “நாங்களும் சிங்கப்பெண்ணே பாடலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளனர்.

யூ டுயூபின் இந்த பதிவையும் விஜய் ரசிகர்களால் வைரலாக, நேற்று இரவு பிகில் திரைப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியானது. இப்பாடல் பெண்களுக்கான புதிய ஆந்தம் என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.