சூப்பர் ஹீரோவாக ஹிப் ஹாப் ஆதி... வீரன் படத்தின் மேக்கிங் வீடியோ இதோ

Veeran Making Video: கடந்த ஜூன் 2ம் தேதி வீரன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. பக்கா ஃபேமிலி என்டர்டைனர் படமாகவும் வித்தியாசமான சூப்பர் ஹீரோ படமாகவும் வீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 12, 2023, 12:58 PM IST
  • வீரன் திரைப்படத்தின் சண்டை காட்சிகளின் மேக்கிங் வீடியோ.
  • வீரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
  • பொள்ளாச்சி அருகே உள்ள வீரனூர் என்ற கிராமத்தில் கதை தொடங்குகிறது.
சூப்பர் ஹீரோவாக ஹிப் ஹாப் ஆதி... வீரன் படத்தின் மேக்கிங் வீடியோ இதோ title=

மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏஆர்கே சரவன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள வீரன் படம் கடந்த ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வீரன் படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது, காரணம் தமிழில் இதுவரை வெளியான சூப்பர் ஹீரோ படங்கள் எதுவும் வெற்றியடைந்தது இல்லை. மேலும் இந்த படம் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி படத்தின் கதை போலவும் இருந்தது.  வீரன் படத்தில் ஹிப் ஹாப் தமிழா தவிர ஆதிரா ராஜ், வினை, பத்ரி, முனிஷ் காந்த், சசி செல்வராஜ், காளி வெங்கட், நக்கலைட்ஸ் செல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி குமரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொள்ளாச்சி அருகே உள்ள வீரனூர் என்ற கிராமத்தில் கதை தொடங்குகிறது.  குமரனுக்கு 15 வயதில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது மின்னல் அவர் மீது படுகிறது, பின்பு மருத்துவமனையில் சேர்த்தாலும் அவருக்கு சுய நினைவு திரும்பவில்லை. இதனால் அவரை சிங்கப்பூருக்கு அழைத்து செல்கின்றனர்.  15 ஆண்டுகளுக்குப் பிறகு வீரனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் கரண்ட் தயாரிப்பதற்காக மண்ணுக்கடியில் கம்பிகளை பதிக்கின்றனர், இந்த கம்பி வெடித்தால் அந்த ஊரே தரைமட்டம் ஆகிவிடும் என்பது குமரனுக்கு தெரிய வருகிறது.  மின்னல் வெட்டியதால் குமரனுக்கு சில சக்திகளும் கிடைக்கிறது, இதனை வைத்து வீரனூர் கிராமத்தை குமரன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே வீரன் படத்தின் கதை.

மேலும் படிக்க | உயிருடன் வந்த மீனாட்சி..வெற்றியை ‘சப்’என அறைந்த சக்தி..மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்..!

பக்கா ஃபேமிலி என்டர்டைனர் படமாகவும் வித்தியாசமான சூப்பர் ஹீரோ படமாகவும் வீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மறுபுறம் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற மின்னல் முரளி திரைப்படத்தின்  சாயல் வீரன் திரைப்படத்தில் இருப்பதாக பலதரப்பட்ட விமர்சனங்கள் ஆரம்பத்தில் எழுந்தன. ஆனால் மின்னல் முரளி திரைப்படத்திற்கும் வீரன் திரைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மின்னல் முரளி படத்தின் இயக்குனர் பேசில் ஜோசப் அவர்களே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் தற்போது வீரன் திரைப்படத்தின் சண்டை காட்சிகளின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி பதிவிட்டு, "மாஸ்க்க போட்டா மின்னல் வீரன்…  தொடர்ந்து வலிமையுடன் ஓடுகிறது!!!- குழந்தைகளே நாங்கள் எங்களது ஓட்டத்தை நிறுத்துவதற்குள் உங்களது பெற்றோர்களை படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். ஏனென்றால் இத்திரைப்படம் டிவியில் பார்ப்பதை விட தியேட்டரில் பார்க்கும்போது இன்னும் நன்றாக இருக்கும்!" என தெரிவித்துள்ளார். 

மேக்கிங் வீடியோ இதோ…

மேலும் படிக்க | டிராமா போடும் முத்துப்பாண்டி.. கண்ணீருடன் சண்முகத்துக்கு அதிர்ச்சி கொடுத்த பரணி - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News