Karnataka Crime News: நவீன காலகட்டத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் மட்டும் குறையவே இல்லை எனலாம். பெண் சிசுக் கொலை மற்றும் குழந்தை திருமணம் ஆகியவை இன்னும் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. சமுதாயத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை நிலைநாட்ட அரசாங்கமும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு இதுபோன்ற குற்றங்களை தடுக்க முயற்சிகளை மேற்கொள்கின்றன.
இருப்பினும், பழமைவாதத்தில் ஊறியவர்களுக்கு குழந்தை திருமணம் போன்ற குற்றத்தின் ஆழம் புரிவதே இல்லை என்பதுதான் வேதனையானது. இதில் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்களை நோக்கிய கண்ணொட்டத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் இன்னமும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தேறி வருகின்றனர். அந்த வகையில், திட்டமிடப்பட்ட குழந்தை திருமணத்தை தடுத்ததால் கர்நாடகாவில் ஓர் கொடூர குற்றச் சம்பவம் நடந்தேறி உள்ளது.
பெண்ணின் தலையுடன் தப்பிய இளைஞர்
கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரி நகரில் கொடூரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மடிகேரி நகரைச் சேர்ந்த 32 வயதான ஆண், தன்னுடன் நிச்சயம் செய்யப்பட்ட 16 வயது பெண்ணின் தலையை வெட்டி, அந்த தலையுடன் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பெண்ணின் தலையுடன் தலைமறைவான இளைஞரை தற்போது உயிரிழந்த நிலையில் கண்டெடுத்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே ஊரின் ஹம்மியாலா என்ற கிராமத்தில் அந்த இளைஞரின் உடலை போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க | 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்... தொகுதிகள்... முக்கிய வேட்பாளர்கள்... பிற விபரங்கள்..!!
தலையை தேடும் போலீசார்
மேலும், அந்த வெட்டப்பட்ட அந்த பெண்ணின் தலையை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து இதில் விரிவாக காணலாம். 32 வயதான பிரகாஷிற்கும், அதே ஊரைச் சேர்ந்த 16 வயதான மீனா என்ற சிறுமிக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. மீனா சமீபத்தில்தான் 10 வகுப்பில் தேர்ச்சியடைந்திருந்தார்.
குழந்தை திருமணம் குறித்து குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் திருமணம் நடக்கும் இடத்திற்கு வந்து, பெற்றோர்களிடம் அந்த திருமணத்தை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளனர். பெண்ணுக்கு 16 வயதே ஆகிறது என்பதால் திருமணம் நடைபெறும்பட்சத்தில் போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் மீதும் கொடூர தாக்குதல்
அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இரண்டு குடும்பங்களும் திருமணத்தை நிறுத்த ஒப்புக்கொண்டன. மேலும் மீனா 18 வயதை அடைந்த உடன் திருமணத்தை நடத்திக்கொள்வதாகவும், அதுவரை திருமணத்தை ஒத்திவைப்பதாகவும் குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர். குடும்பத்தினர் இதனை ஒப்புக்கொண்டாளும் மணமகனான பிரகாஷ் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.
தொடர்ந்து, அந்த சிறுமியின் வீட்டாரை திருமணத்தை மீண்டும் நடத்தும்படி வற்புறுத்தியுள்ளார். தொடர்ந்து, இன்று வீட்டிற்கு வந்த பிரகாஷ் மீனாவின் பெற்றோரையும் தாக்கியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பிரகாஷ் மீனாவின் தந்தையை உதைத்தும், கூர்மையான பொருளைக் கொண்டு மீனாவின் தாயாரை தாக்கியதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
மேலும், வீட்டில் இருந்த மீனாவை அங்கிருந்த வெளியே தள்ளி, 100 மீட்டருக்கு இழுத்துச் சென்றுள்ளார். மேலும், அந்த பெண்ணின் தலையை வெட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என கூறப்படுகிறது. தற்போது மீனாவின் தந்தையும், தாயாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் படிக்க | அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ