கமல், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி- தூள் கிளப்பும் வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன் தான் பணியாற்றும் படங்கள் குறித்து முக்கிய தகவல்கள் பகிர்ந்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 28, 2021, 12:15 PM IST
கமல், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி- தூள் கிளப்பும் வெற்றிமாறன் title=

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைதும் சூப்பர் ஹிட் ஆகும். கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசால் அசுரன் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கபட்டது. அதன்படி சென்ற திங்கட்கிழமை அவருக்கு டெல்லியில் தேசிய விருது வழங்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது விகடன் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த இயக்குனர் வெற்றிமாறன் (Vetrimaaran) தான் பணியாற்றும் படங்கள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது விஜய், கமல் உள்ளிட்டோரும் இணைந்திருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.  அதன்படி, சூர்யா நடிக்கும் வாடிவாசலுக்கான வேலை பரபரப்பாக போய்கொண்டு இருக்கிறது என்றார். தற்போது வரை சூர்யாவும், அமீரும் இந்த படத்திற்கு உறுதியாகி உள்ளனர். மற்ற நடிகர்கள் தேர்வும் விரைவில் நடைபெறும். மேலும் பேசிய அவர் வாடிவாசல் ரொம்ப எளிமையான கதை. இந்த படத்திற்கு காலை மாடு முக்கிய பங்காக உள்ளது. காளை மாடுகள் புதுசா ஒருத்தரை உடனே நம்பாது. அதுகூட பழக ரொம்ப நாள் தேவைப்படுது. அதனால சூர்யா சார் ஒரு காளை மாட்டை வளர்த்து, பழக ஏற்பாடுகள் செஞ்சிருக்கோம். ஆனால், படத்துக்கு அது மட்டும் பத்தாது. நாம நினைக்கிற விஷயங்களை எல்லாம் பண்றதுக்கு நாம ஒரு காளையை உருவாக்க வேண்டியிருக்கு. அதுக்கு அனிமேட்ரானிக்ஸ் துணையும் வேணும். அதுக்கான வேலைகளும் இப்ப நடந்துட்டு இருக்கு என்றார். 

ALSO READ:இணையத்தில் வைரலாகும் சமந்தா - நயன்தாராவின் BTS புகைப்படங்கள்

அத்துடன் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் சுயசரிதையையும் வெப் சீரிஸாக எடுக்க முயற்சிகள் நடப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் நடிகர் விஜயை வைத்து விரைவில் படம் எடுக்கவுள்ளதாகவும், விஜய் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் வெற்றிமாறன் கூறியுள்ளார். என்னோட லைன் அப்தான் டிலே ஆகுது. நீங்க மற்ற படங்களை முடிச்சிட்டு வாங்கன்னு விஜய் சார் தரப்புல சொல்லியிருக்காங்க. இன்னைக்கு இருக்கிற சூப்பர் ஸ்டார்ஸ்ல விஜய் சாரோட படம் பண்றதுக்கான வாய்ப்பிருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம். அதனால இப்ப இருக்கிற படங்களை முடிச்சிட்டு அவரோட படம் பண்றதுல ஆர்வமா இருக்கேன் என்று விகடன் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார்.

இதற்கு பிறகு கமல்ஹாசனுக்காகவும் ஒரு திட்டம் இருப்பதாகவும், வாய்ப்பிருந்தால் அதுவும் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இயக்குனர் வெற்றிமாறன், சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதை பற்றி பேசிய அவர், விடுதலை நாங்க நினைச்சதைவிடவும் ரொம்ப சவாலான ஒரு சினிமாவா இருக்கு. இப்படி மிகவும் பிசியாக இருக்கும் வெற்றிமாறனுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

 

 

ALSO READ: தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் பீஸ்ட் பட நாயகி புகழாரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News