வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு செல்லும் விக்கி? இவருக்கு இந்த நிலைமையா!

Vignesh Shivan: பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன், வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Jun 18, 2023, 04:51 PM IST
  • பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன்.
  • வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வருவதாக தகவல்.
  • ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாராம்.
வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு செல்லும் விக்கி? இவருக்கு இந்த நிலைமையா!  title=

கோலிவுட்டின் பிரபல இயக்குநராக வலம் வருபவர், விக்னேஷ் சிவன். இவர், வெள்ளித்திரையில் பலரையும் ஹீரோவாக வைத்து படம் எடுத்த இவர், அடுத்து சின்னத்திரையில் நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நயன்தாராவுடன் திருமணம்..இரு குழந்தைகளுக்கு தந்தை...

இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் சிம்பு மற்றும் வரலக்‌ஷ்மி சரத்குமாரை வைத்து போடா-போடி என்ற பெயரில் தமிழ் படம் ஒன்றை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்ச்சனங்களை பெற்று ஓரளவு வசூல் ரீதியாக ஓரளவு வெற்றி பெற்றது. அடுத்து, இவர் விஜய் சேதுபதியை வைத்து எடுத்த ‘நானும் ரௌடிதான்’ படம் ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்படத்தில் நாயகியாக நடித்திருந்த நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனிற்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமண வாழ்க்கைக்கும் இணைந்தனர். டிசம்பர் மாதம் சர்ரகஸி முறை மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு நயன்-விக்கி பெற்றோர்களாகினர். 

மேலும் படிக்க | OTTல் வெளியாகியுள்ள புதிய திரைப்படங்கள்; Netflix, Amazon, Hotstar, ZEE5ல் பாருங்கள்!

படங்கள் தோல்வி: 

விக்னேஷ் சிவன், தற்போது நயன்தாராவுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார். இவர் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தை தவிர வேறு எந்த படமும் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. கடைசியாக இவர் சமந்தா மற்றும் நயன்தாராவை வைத்து இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மண்ணை கவ்வியது. விக்னேஷ் சிவன் மிகப்பெரிய அஜித் ரசிகர்.  இவர் அஜித்தின் 63ஆவது படத்தை இயக்க இருந்தார். ஆனால், அது காதல் கதையாக இருப்பதால் அது தனக்கு செட் ஆகாது எனக்கூறி அஜித் அந்த படத்தின் வாய்ப்பை வேறு இயக்குநருக்கு கொடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. 

சின்னத்திரை எண்ட்ரி? 

இதுவரை பெரிய திறையில் பெரிய பெரிய ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்டு அவர்களை டைரக்டு செய்து வந்த விக்னேஷ் சிவன், தற்போது சின்னத்திரைக்கு செல்கிறாராம். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சி, காஃபி வித் டிடி மற்றும் சிம்ப்ளி குஷ்பூ போன்ற நிகழ்ச்சி போல இருக்கும் என கூறப்படுகிறது. 

இது புதிதல்ல...

விக்னேஷ் சிவனைப்போல இதற்கு முன்னர் பல பிரபலங்கள் சின்னத்திறையில் பிரவேசித்துள்ளனர். பிரபல நடிகையாக இருந்த அனு, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காஃபி வித் அனு நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். நடிகைகள் நளினி, ரம்யா கிருஷ்ணன், ராதிகா போன்ற பலர் சில சீரியல்களில் நடித்துள்ளனர். அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகின்றனர். குஷ்பு சினிமாவிற்குள் மீண்டும் வருவதற்கு கூட, அவர் தொகுத்து வழங்கிய சிம்ப்ளி குஷ்பூ நிகழ்ச்சி ஒரு காரணமாக அமைந்தது. இவ்வளவு ஏன், உலக நாயகன் கமல் ஹாசன் கூட டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அவர் இல்லாத சில நாட்கள் நடிகர் சிம்பு அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இப்போது அந்த லிஸ்டில் விக்னேஷ் சிவனும் இணைந்துள்ளார். ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

திருமண வீடியோ என்னாச்சு..?

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்னர் அதற்கான ட்ரைலர் முதற்கொண்டு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் என்ன ஆனதோ தெரியவில்லை அந்த வீடியோ குறித்த எந்த தகவலையும் நெட்ஃப்ளிக்ஸ் தளம் வெளியிடாமல் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் இருதரப்பினருக்கும் இடையே ஏதோ பஞ்சாயத்து எனும் செய்தியும் உலா வந்தது. “அந்த வீடியோக்கு என்னதான் ஆச்சு.” என ரசிகர்கள் அவ்வப்போது கேள்வியெழுப்பி வருகின்றனர், 

மேலும் படிக்க | உண்மையான சார்பட்டா பரம்பரை ஹீரோ காலமானார்..! ரசிகர்கள்-பிரபலங்கள் இரங்கல்!

மேலும் படிக்க | Leo First Single: நான் ரெடி பாடலை பாடியது யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News