விக்ரம் ஆடியோ லான்சில் பங்கேற்கும் விஜய், சூர்யா?

கமல் நடித்துள்ள 'விக்ரம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள நடிகர்கள் ரஜினி, விஜய் மற்றும் சூர்யா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 14, 2022, 03:32 PM IST
  • நாளை விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறுகிறது.
  • இப்படத்தின் ட்ரைலரும் வெளியாக உள்ளது.
  • இவ்விழாவில் பல நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
விக்ரம் ஆடியோ லான்சில் பங்கேற்கும் விஜய், சூர்யா?  title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படம் ஜூன்-3ம் தேதி வெளியாகவுள்ளது.  'விக்ரம்' படத்தின் ஆடியோ லான்ச் நாளைய தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது, இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துகொள்ள போகின்றனர்.  இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் மற்றும் சூர்யா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே 'விக்ரம்' படத்தில் நடிகர் சூர்யா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதால் நிச்சயம் அவர் இந்த விழாவில் கலந்துகொள்வார், ஆனால் மற்ற இரண்டு நடிகர்களும் விழாவில் கலந்துகொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் படிக்க | ‘Marvel’ லெவலில் உருவாகும் ‘KGF 3’ - உலகையே அதிரவைக்கும் புதிய அப்டேட்!

கோவிட் தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் பெரும்பாலும் நிகழ்ச்சிகளையும், பொது வெளியில் செல்வதையும் தவிர்த்து வருகிறார்.  அவர் 'அண்ணாத்தே' படத்தின் ஆடியோ வெளியீட்டை கூட மறுத்துவிட்டார், இந்நிலையில் கமல்ஹாசன் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.  இருப்பினும் கமல்ஹாசனும், ரஜினியும் நல்ல நண்பர்கள் என்பதால், நண்பனுக்காக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  அதேபோல நடிகர் விஜயும் இந்த விழாவில் கலந்துகொள்வாரா மாட்டாரா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது, ஏனெனில் விஜய் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 'தளபதி 66' படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார்.  

kamal

கமல் மீது நடிகர் விஜய் அதிக மரியாதையை வைத்திருக்கிறார், மேலும் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கிறார் இவர்கள் இவருக்காக அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா அல்லது கலந்துகொள்ள மாட்டாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  மேலும் 'விக்ரம்' பட ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஏனெனில் நடிகர் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் தயாரிக்க போகும் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார், அதுமட்டுமல்லாது அவர் இப்போது சென்னையில் தான் இருக்கிறார்.  அதனால் சிவகார்த்திகேயன் விழாவில் பங்குபெறக்கூடும் என்று கருதப்படுகிறது.

siva

மேலும் படிக்க | ஒய் திஸ் கொலவெறி... தனுஷ் பாடலுக்கு பஞ்சாயத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News