Pichaikkaran 2: பிச்சைக்காரன் 2 படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

Pichaikkaran 2: 'பிச்சைக்காரன்-2' வெளியான முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில், பொன்னியின் செல்வன்-2 உட்பட மற்ற அனைத்து படங்களுக்கும் போட்டியாக இருந்து வருகிறது.    

Written by - RK Spark | Last Updated : May 28, 2023, 02:21 PM IST
  • 'பிச்சைக்காரன்-2' படம் வெளியான ஒன்பது நாட்களில் ரூ.31 கோடிக்கு மேல் வசூலித்தது.
  • 'பிச்சைக்காரன்-2' படம் மே 19ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது.
  • 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
Pichaikkaran 2: பிச்சைக்காரன் 2 படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? title=

Pichaikkaran 2: பிரபல இசையமைப்பாளர், கதாநாயகன் என்பதை தாண்டி தற்போது இயக்குனராக அவதாரமெடுத்து இருக்கும் விஜய் ஆண்டனியின் இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன்-2' படம் தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது.  இந்த படத்தில் காவ்யா தபார், ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், யோகி பாபு, ராதா ரவி போன்ற பல நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  இதற்கு முன்னர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டில் வெளியான 'பிச்சைக்காரன்' படம் மிகப்பெரியளவில் வெற்றி பெற்று, பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.  விஜய் ஆண்டனியின் நடிப்பில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் 'பிச்சைக்காரன்'.  தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் விஜய் ஆண்டனிக்கு இப்படம் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கியது.  பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்கு பின்னர், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது.  'பிச்சைக்காரன்-2' படத்தை சசி தான் இயக்குவதாக இருந்த நிலையில், அவரால் சில சூழ்நிலை காரணமாக இப்படத்தை இயக்க முடியாமல் போனது.  அதன்பின்னர் அவர் பல இயக்குனர்களையும் அணுகியிருக்கியிருக்கிறார், அவர்களாலும் இந்த படத்தை எடுக்க முடியாமல் போக பின்னர் விஜய் ஆண்டனியே இந்த படத்தை இயக்க திட்டமிட்டு இயக்கியுள்ளார்.  

மேலும் படிக்க | விரைவில் ஜான்விக் 5 பணிகள் தொடக்கம்..? வெளியானது எக்ஸ்க்ளூசிவ் தகவல்..!

விஜய் ஆண்டனி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.  இப்படம் வெளியான ஒன்பது நாட்களில் ரூ.31 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.  'பிச்சைக்காரன்- 2' படத்தை இயக்கியது மட்டுமின்றி, படத்தில் ஹீரோவாகவும் நடித்து, படத்துக்கு இசையமைத்து, படத்தொகுப்பையும் கையாண்டு, டி.ரஞ்சேந்தர் போல் தான் ஒரு ஆல்ரவுண்டர் என்பதை விஜய் ஆண்டனி நிரூபித்து காட்டியிருக்கிறார்.  'பிச்சைக்காரன்-2' உலகம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மே 19ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது.  சமீபத்தில் வெளியான மற்ற படங்களுடன் ஒப்பிடும் போது, ​​தமிழகத்தில் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நன்றாகவே இருப்பது கண்கூடாக தெரிகிறது.  'பிச்சைக்காரன்-2' வெளியான முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில், பொன்னியின் செல்வன்-2 உட்பட மற்ற அனைத்து படங்களுக்கும் போட்டியாக இருந்து வருகிறது.  அருள்நிதி நடிப்பில் புதிதாக வெளிவந்துள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படம் இன்னும் விஜய் ஆண்டனி படத்தின் வசூல் அளவை நெருங்க கடுமையாக போராடி வருகிறது.

'பிச்சைக்காரன்-2' படத்தின் நாள் வாரியான பாக்ஸ் ஆபிஸ் வசூல்:

- நாள் 1: ரூ.6.07 கோடி

- நாள் 2: ரூ.5.49 கோடி

- நாள் 3: ரூ.6.44 கோடி

- நாள் 4: ரூ.2.58 கோடி

- நாள் 5: ரூ.2.23 கோடி

- நாள் 6: ரூ.2.03 கோடி

- நாள் 7: ரூ.2.02 கோடி 

- நாள் 8: ரூ.1.56 கோடி

- நாள் 9: ரூ.1.50 கோடி 

'பிச்சைக்காரன்-2' படத்தின் மொத்த 8 நாள் வசூல்: ரூ 31.33 கோடி

மேலும் படிக்க | வெள்ளி நிலவாக வெள்ளை நிற உடையில் ‘இந்தியன் 2’ பட நாயகி ரகுல் ப்ரீத் சிங்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News