"பிச்சைக்காரன் 2" : ரூ.2000 வாபஸ் பெறப்பட்டது குறித்து விஜய் ஆண்டனி அதிரடி

Vijay Antony reacts to Rs 2000 ban: 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நடிகரும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்து இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 22, 2023, 10:08 AM IST
  • ’பிச்சைக்காரன் 2’ வெளியான தினத்தில் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவதாக அரசு அறிவிப்பு.
  • ரூ.2000 செல்லாது அறிவிப்புக்கு விஜய் ஆண்டனி கருத்து.
"பிச்சைக்காரன் 2" : ரூ.2000 வாபஸ் பெறப்பட்டது குறித்து விஜய் ஆண்டனி அதிரடி title=

கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொருட்டு இந்திய ரிசர்வ் வங்கியால் செல்லாததாக்கப்பட்டது, இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அப்போது பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கிடையில் தற்போது புழக்கத்தில் இருந்து வரும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில், 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டாம் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதுதவிர, மே 23 முதல் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறவும் ரிசர்வ் வங்கி உத்தரவினை பிறப்பித்து இருந்தது. அத்துடன் எந்த ஒரு வங்கிக் கிளையிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான வாய்ப்பு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை. அதேநேரத்தில், அவை திரும்பப் பெறப்படுகின்றன. வங்கிகளில் வரவு வைப்பது என்பது வழக்கமாக வரவு வைப்பது போன்றதே. இதில் கட்டுப்பாடுகள் கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது.

இதனிடையே 2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் இதற்கும் பிச்சைக்காரன் படத்திற்கும் ஒரு கனெக்க்ஷன் இருக்கிறது மக்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் பிச்சைக்காரன் முதல் பாகம் திரைப்படம் வெளியான ஒரு சில மாதங்களில் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது. தற்போது ’பிச்சைக்காரன் 2’ வெளியான தினத்தில் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவதாக அரசு வெளியானதே இதற்கு முக்கிய காரணமாகும்.

பிச்சைக்காரன் 3 வந்தால் என்னவாகும்? கலக்கத்தில் மக்கள்!

மேலும் படிக்க | பிச்சைக்காரன் 3 வந்தால் என்னவாகும்? கலக்கத்தில் மக்கள்!

இந்த நிலையில் சென்னை அம்பத்தூரில் உள்ள திரையரங்கிற்கு வந்த விஜய் ஆண்டனியிடம் ரூ.2000 நோட்டு செல்லாது என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது.,

இது எதேச்சையாக நடக்கவில்லை, பிளான் பண்ணி தான் நடந்தது, ’பிச்சைக்காரன்’ படம் வெளியான போது பத்து ரூபாய் நோட்டாக இருந்தால், கள்ள நோட்டு இருக்காது, பெரிய மதிப்புள்ள நோட்டாக இருப்பதால் எளிதாக மறைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சொன்னேன், 

"பிச்சைக்காரன் படம் வெளியான போது பத்து ரூபாய் நோட்டாக இருந்தால், கள்ள நோட்டு இருக்காது, பெரிய நோட்டாக இருப்பதால் எளிதாக மறைத்து வைத்து இருக்கிறார்கள் என்று கூறினேன், கவர்மெண்ட் உடனே 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டை செல்லாது என அறிவித்தார்கள். ஆனால் 2000 ரூபாய் நோட்டை வெளியான போது நான் வருத்தப்பட்டேன்.

ஆனால் அப்போதே பிளான் பண்ணி தான் இந்த 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளார்கள் என்று தெரிகிறது. தற்போது அதை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் பெரும்பாலான மக்களுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும். பதுக்கி வைத்து இருக்கும் பிகிலிகள் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று கூறினார்.

மேலும் படிக்க | தமிழ் சினிமாவின் 'நீங்காத பிறை' - பாலு மகேந்திராவின் பிறந்தநாள் இன்று

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News