Pichaikaaran 2 Box Office Collection Day 1: பிச்சைக்காரன் 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 1 கணிப்பு: விஜய் ஆண்டனிக்கு இசையமைப்பாளராக இருந்து நடிகர் அவதாரம் எடுத்தபோது வெளிவந்த நான், சலீம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெரும் வரவேற்பை தந்தன. தொடர்ந்து, அவர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து 2016ஆம் ஆண்டு மார்ச்சில் வெளிவந்த பிச்சைக்காரன் திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு பெரும் புகழை சம்பாத்தித்து கொடுத்தது.
பிச்சைக்காரன் வெற்றியை அடுத்து தொடர்ந்து, நடிகராகவும், இசையமைப்பாளராகவும், படத்தொகுப்பாளராகவும் அவர் இயங்கிவந்தார். இந்நிலையில், விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்தது மட்டுமின்றி இயக்கம், இசை, படத்தொகுப்பு உள்ளிட்ட பணிகளை இவரே கவனித்துக்கொண்டுள்ளார்.
பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தான் அவருக்கு கடுமையான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திற்கு பின் சிகிச்சை பெற்று மீண்டு வந்த நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தின் மீது பல எதிர்பார்ப்புகள் எழுந்தது. படத்திற்கு நீதிமன்றத்திலும் சில பிரச்னைகள் வர, அனைத்தையும் சுக்குநூறாக்கி பிச்சைக்காரன் 2 திரைப்படம் நேற்று (மே 19) வெளியானது.
மேலும் படிக்க | பிச்சைக்காரன் 3 வந்தால் என்னவாகும்? கலக்கத்தில் மக்கள்!
இந்த படம் ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், முதல் பாகத்தை போல இதுவும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலை குவிக்கும் எனவும் கணிக்கப்பட்டது. கோடைக்கால விடுமுறை, பள்ளி விடுமுறை உள்ளிட்ட காரணங்களாலும், கடந்த சில வாரங்களாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாததின் காரணமாகவும் இப்படம் வசூலில் சாதனை படைக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்பட்டது. 2021ஆம் ஆண்டு வெளியான அவரின் கோடியில் ஒருவன் திரைப்படம் நல்ல வசூலை குவித்திருந்தது. ஆனால், கடந்த ஏப். 22ஆம் தேதி வெளியான தமிழரசன் திரைப்படம் பெரியளவில் ஓடவில்லை.
பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். பிச்சைக்காரன் 2 படத்தில் கதாநாயகியாக காவ்யா தாப்பர் நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியானது. தமிழ்நாட்டில் 400 திரைகளிலும், ஆந்திரா, தெலங்கானாவில் 600 திரைகளிலும் என உலகம் முழுவதும் மொத்தம் 1600 திரைகளில் படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. இந்த படம் முதல் நாளில் மொத்தம் ரூ. 8.15 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழ்நாட்டில் ரூ. 3.05 கோடி எனவும், தெலுங்கில் ரூ 4.1 கோடி எனவும், கர்நாடகாவிலும், வெளிநாடுகளிலும் சேர்த்து ரூ. 1 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கில் பிச்சகடு 2, கன்னடத்தில் பிக்ஷுகா 2, கேரளாவில் பிக்ஷக்காரன் 2 என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | பக்கா கிராமத்தானாக மாறிய நடிகர் ஆர்யா.. வெளியானது மிரட்டலான ட்ரைலர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ