கடந்த மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு தற்போது வரை பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் படத்தில் நடிகர் சூர்யா கேமியோ ரோலில் நடித்திருந்தனர், இப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்திருந்தது. இந்த வெளியான பெரிய ஹீரோக்களின் படங்கள் சில கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், விக்ரம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
மேலும் படிக்க | தமிழகத்தை தொடர்ந்து ஆந்திர அரசியலில் போட்டியிடும் விஷால்?
கமல்ஹாசன் கம்பேக் கொடுக்கும் விதமாக அமைந்த இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது, அதேபோல படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்து இருந்தது. இந்த படத்தின் காட்சிகளை எந்த அளவிற்கு ரசிகர்கள் ரசித்தர்களோ அதே அளவு பாடல்களையும் ரசித்தார்கள், அதிலும் குறிப்பாக அனிரூத் இசையில் கமல் எழுதிய 'பத்தல பத்தல' பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. பட வெளியீட்டிற்கு முன்னர் பாடல் வெளியானபோது இதில் இடம்பெற்றிருந்த சில வரிகள் அரசாங்கத்தை சாடுவது போன்று அமைந்திருந்தது.
இந்த பாடல் சர்ச்சையில் சிக்கியது, இப்பாடலில் இடம்பெற்ற 'ஒன்றியத்தின் தப்பாலே' என்று தொடங்கும் சில சர்ச்சையான வரிகளை நீக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து பாடலில் சர்ச்சையான வரிகள் நீக்கப்பட்டது, படத்தில் இந்த பாடல் முழுமையான வரிகளுடன் இல்லாமல் இருந்தது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் நேற்றைய தினம் யுடியூபில் 'பத்தல பத்தல' பாடல் வீடியோ வெளியானது, நீக்கப்பட்ட வரிகள் இப்போது இடம்பெற்றிருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இதிலும் அந்த குறிப்பிட்ட வரிகளை படக்குழு நீக்கியிருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மேலும் படிக்க | கார் விபத்தில் சிக்கிக்கொண்ட கேஜிஎஃப் நடிகர்..ரசிகர்கள் அதிர்ச்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR