விக்ரம் நடிக்கும் தங்கலான் ரிலீஸ் தேதியில் மாற்றம்!

Thangalaan Release Date: ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 27, 2023, 06:33 PM IST
  • தங்கலன் ஜனவரி 26, 2024 அன்று வெளியாகிறது.
  • நவம்பர் 1ஆம் தேதி புதிய டீசர் வெளியாகிறது.
  • பார்வதி மற்றும் மாளவிகா மோகன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
விக்ரம் நடிக்கும் தங்கலான் ரிலீஸ் தேதியில் மாற்றம்!  title=

நடிகர் சீயான் விக்ரம், இயக்குநர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகி உள்ள படம் தங்கலான். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார்.  தற்போது வெளியாகி உள்ள அதிகார்வப்பூர்வ அறிவிப்பின் படி தங்கலான் திரைப்படம் ஜனவரி 26, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.  முன்னதாக இந்த படத்தை பொங்கல் 2024ல் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் பொங்கல் அன்று அயலான், லால் சலாம் போன்ற படங்கள் வெளியாக உள்ள நிலையில் 2 வாரங்களுக்கு பிறகு தங்கலான் வெளியாகிறது.  டீசர் நவம்பர் 1, 2023 அன்று வெளியிடப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க | கைதி 2 குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

இப்படத்தில் பார்வதி திருவோடு, பசுபதி, டேனியல் கால்டாகிரோன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தங்கலான் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது கோலார் தங்க வயல்களில் நடந்த உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. படப்பிடிப்பு தளத்தில் விக்ரம் விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக மே மாதம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு ஜூன் மாதத்தில் மீண்டும் தொடங்கி ஜூலையில் நிறைவடைந்தது.  

தங்கலான் படம் குறித்து தனஜ்ஜெயன் கூறுகையில், படத்தின் தயாரிப்பில் எந்த சமரசமும் இல்லை, படம் ஹாலிவுட் தரத்தில் உள்ளது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது இணை தயாரிப்பாளரான ஞானவேல்ராஜாவுக்கு படத்தின் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டது. படப்பிடிப்பு தேதிகள் மற்றும் பட்ஜெட்டில் நீட்டிப்புகள் இருந்தன, ஆனால் படப்பிடிப்பு இப்போது முடிவடைந்து என்று கூறினார். மேலும் தங்கலான் படத்தை பல விருது விழாவிற்கும் அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது.

தங்கலான் தவிர, நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இரண்டு பாகங்கள் கொண்ட இப்படத்தின் அதிரடி ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  முதல் பாகத்திற்கு துருவ நட்சத்திரம்: அத்தியாயம் ஒன்று - யுத்த காண்டம் என்று பெயரிடப்பட்டது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் இப்படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ராதிகா, அர்ஜுன் தாஸ், திவ்யதர்ஷினி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.  2011 மும்பை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்பு,  உளவாளிகள் மற்றும் ராணுவ வீரர்களுடன் சம்பந்தப்பட்ட படமாக துருவநட்சத்திரம் உருவாகி உள்ளது. 

மேலும் படிக்க | லியோவில் விஜய்யுடன் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? ‘இந்த’ நடிகரின் மகள்தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News