விவேகம்: "சர்வைவா" பாடல் சிங்கிள் ஆடியோ டீசர் சாதனை!

Last Updated : Jun 15, 2017, 04:48 PM IST
விவேகம்: "சர்வைவா" பாடல் சிங்கிள் ஆடியோ டீசர் சாதனை! title=

'தல' அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் சிங்கிள் ஆடியோ டீசர் வெளியானது. இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் பாடல்களின் பணிகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அஜித் நடிக்கும் விவேகம் படம் அவருக்கு 57-வது படம் ஆகும். 'சிறுத்தை' சிவா இயக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் கிட்டதட்ட ரூ. 90 கோடி செலவில் தயாரித்துள்ளது. 

விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

இப்படத்தின் இசை உரிமைக்கு கடும் போட்டி நிலவி வந்தது. அஜித்தின் சமீபத்திய படங்கள் பலவற்றின் இசை உரிமையைப் பெற்ற சோனி நிறுவனம் இப்படத்தின் இசை உரிமையையும் வாங்கியுள்ளது. 

இந்நிலையில் விவேகம் படத்தின் 50 வினாடி பாடல் டீசர் நேற்று இரவு 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, 12 மணிக்கு  இப்படத்தின் சர்வைவா என்ற பாடலின் 25 நொடி மேக்கிங் டீசர் வெளியானது. '

* 10 நிமிடத்தில் 1 லட்சம் வீவ்ஸ் பெற்றது. 

* ஒரு மணிநேரத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் வீவ்ஸ்களையும்

* 30 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்ததுள்ளது.
 
டீசரை விட குறைவான ஹிட்ஸ் என்றாலும் பாடல் டீசரை பொறுத்தவரை இதுதான் அதிகபட்சம். இந்த பாடல் முழு வடிவமாக வரும் 19-ம் தேதி சிங்கிள் பாடலாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News