காலா' படத்தலைப்பின் பின்னணி என்ன என்று அப்பாட்டின் இயக்குனர் பா.ரஞ்சித் விளக்கமளித்துள்ளார்.
கபாலி படத்துக்கு பிறகு மீண்டும் பா. ரஞ்சித்துடன் இணைகிறார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு 'காலா' என பெயரிட்டுள்ளார்கள். மே 28-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். படத்தின் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளராக முரளி, சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணிபுரியவுள்ளார்கள்.
இப்படத்தின் தலைப்பு இன்று காலை 10 மணிக்கு நடிகர் தனுஷ் தனது டிவிட்டார் பக்கத்தில் அறிவித்தார். 'காலா' படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய போஸ்டர்களை தயாரிப்பாளர் தனுஷ் இன்று வெளியிட்டுள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் ரஞ்சித், 'காலா' என்றால் காலன், எமன் என்று சொல்லலாம். 'கரிகாலன்' என்ற பெயரின் பெயர்ச்சொல் தான் 'காலா'. 'கரிகாலன்' என்ற தலைப்பின் சுறுக்கமே 'காலா'.
மும்பையில் 28-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை இன்றே விரைவில் அறிவிக்கவுள்ளோம். முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையிலும், அதனைத் தொடர்ந்து சென்னையிலும் படப்பிடிப்பு நடைபெறும்.
பட வெளியீடு குறித்து இன்னும் எதுவும் முடிவாகவில்லை. நிச்சயமாக நல்ல திரைப்படமாக கொடுக்க முயற்சி செய்வோம். மேலும் இப்பாட்டின் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.