இந்த வாரம் ஓடிடியில் வெளியாகப் போகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்

Upcoming OTT Tamil Movies 2023: இந்த வாரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் பல சூப்பர்ஹிட் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 9, 2023, 02:45 PM IST
  • பல நிறுவனங்களும் ஓடிடி தளத்தை முன்னெடுத்துள்ளது.
  • வெப் தொடர்களுக்கு பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
  • இந்த வாரம் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் வெப்சீரிஸ் பற்றி நாம் இதில் காணலாம்.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகப் போகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் title=

இந்த வாரம் ஓடிடி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்: இந்த வாரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் பல சூப்பர்ஹிட் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அதனைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம். 

இந்தியாவில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி என்பது கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்துக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார், ஆஹா, சோனி லைவ், ஜீ5, சன் நெக்ஸ்ட் என பல நிறுவனங்களும் ஓடிடி தளத்தை முன்னெடுத்துள்ளது.  அதன்படி சினிமாவில் சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரையில் நல்ல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகி வருகின்றன.  மேலும் வெப் தொடர்களுக்கு பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.  திரையரங்குகளில் வெற்றி பெற்ற பிறகு OTTயில் வெளியாகும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.  அந்த வகையில் இந்த வாரம் பல படங்கள் மற்றும் வெப்சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் வெப்சீரிஸ் பற்றி நாம் இதில் காணலாம்.

மேலும் படிக்க | நடிகர் யோகிபாபுவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரல்!

தி ரோடு: த்ரிஷா நடித்துள்ள புதிய படம் ‘தி ரோடு’.  இப்படத்தை அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார்.  மதுரை யில் கடந்த 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தி ரோடு படம் நவம்பர் 10 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகயுள்ளது.

வாலாட்டி: வாலாட்டி என்ற மலையாள திரைப்படமும் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. ரோஷன் மாத்யோ ஹீரோவாக நடித்த இந்த படத்தில் பிரபல டப்பிங் கலைஞர் ரவீனா ரவி நாயகியாக நடித்துள்ளார். தற்போது வாலாட்டி படம் நவம்பர் 10 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகயுள்ளது.

பிப்பா: இஷான் கட்டர் நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் பிப்பா. 1971 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரில் இந்தியாவின் கிழக்குப் போர்முனையில் போரிட்ட 45வது குதிரைப்படை டேங்க் ஸ்குவாட்ரனின் மிகவும் ஆற்றல் வாய்ந்த மற்றும் துணிச்சலான கேப்டன் மேத்தா ஆவார். இந்த கேரக்டரில் இஷான் நடித்துள்ளார். இப்படம் நாளை அதாவது 10 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங்காக உள்ளது.

கூமர்: ஆர் பால்கி இயக்கத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் சயாமி கெர் நடித்துள்ள திரைப்படம் கூமர். இந்த திரைப்படத்தில் ஷபானா ஆஸ்மி மற்றும் அங்கத் பேடி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை, ZEE5 OTT தளத்தில் நவம்பர் 10ஆம் தேதியிலிருந்து பார்க்கலாம்.

லேபிள்: அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர் லேபிள். இந்தத் தொடரில் ஜெய், தன்யா ஹோப், மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இத்தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை வெளியாக உள்ளது.

ஷாட் பூத் த்ரீ: வெங்கட் பிரபு, சினேகா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ள குழந்தைகளுக்கான திரைப்படம், ‘ஷாட் பூட் த்ரீ’. யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் சார்பாக அருணாச்சலம் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியுள்ளார். சிவாங்கி, பூவையார், ப்ரணிதி, கைலாஷ் ஹீட், வேதாந்த் வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர். நாய் ஒன்றும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. ஒரு நாயின் மீது அதீத பாசம்கொண்ட சிறுவனின் கதையைச் சொல்கிறது இந்தப்படம். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற இந்தப்படம் 11 விருதுகளை வென்றது. எனவே இந்த படம் நவம்பர் 10 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங்காக உள்ளது.

புலிக்குத்தி பாண்டி: முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் நவம்பர் 10-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

மேலும் படிக்க | The Trail - தெலுங்கில் வெளியாகும் முதல் விசாரணை திரைப்படம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News