திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். நேற்றிரவு மும்பை வந்த அவரது உடல், இன்று இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் மாலை அவரது உடல் வில்லேபார்லே மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 4 நாட்களாகவே அதிகமாக ஸ்ரீதேவி மரணம் பற்றி செய்திகளே ஊடகங்களும், பத்திரிக்கைகளும் வெளியிட்டு வந்தன. ஆனால் சிரியாவில் அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிப்பதை பற்றியோ, விழுப்புரம் சம்பவத்தை பற்றியோ அதிகமாக செய்திகள் ஊடகங்களும், பத்திரிக்கைகளும் வெளியிட்ட வில்லை என சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனங்கள் தெரிவித்து வந்தன.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறிய கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் கூறியதாவது,
"அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் மறைந்த ஸ்ரீதேவியின் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். ஒருநாள் பாலிவுட் நடிகை சன்னி லியோன் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என கவலைப்படுகிறேன்" என்று கூறியிருந்தார். இந்த பதிவை முகநூலில் இருந்து எடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனாலும் இவரது பதிவுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
All the news channels are showing songs and clips of Late Sridevi
Wondering what will happen when Sunny Leone expires someday #facebook #forward pic.twitter.com/D1whQIV1kD— kasturi shankar (@KasthuriShankar) February 27, 2018