காவலர்களின் வலியை பதிவு செய்ய காத்திருக்கும் ”ரைட்டர்”!

காவல்துறையில் ரைட்டர்களில் வலியை பதிவு செய்திருக்கும் ’ரைட்டர்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வரும் 24 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

Written by - அதிரா ஆனந்த் | Edited by - S.Karthikeyan | Last Updated : Dec 17, 2021, 08:48 AM IST
காவலர்களின் வலியை பதிவு செய்ய காத்திருக்கும் ”ரைட்டர்”!  title=

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரைட்டர் திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ALSO READ | அமுக்கு டுமுக்கு அமால் டுமால் - DON படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது. சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்துள்ளது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாக தோன்றுகிறார் சமுத்திரக்கனி. காவல்நிலையத்தில் உள்ள ரைட்டர்களின் வலியை இயக்குனர் அழுத்தமாக பதிவு செய்திருப்பதை படத்தின் ட்ரெய்லரில் காண முடிகிறது. 

‘போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு’... ‘காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்துக்கிடக்கும் மனித உரிமை’ உள்ளிட்ட பல வசனங்கள் தற்கால வாழ்வியலில் நடக்கும் ஒரு வலியை வெளிக்கொண்டுவரும் படமாக “ரைட்டர்” இருக்கும் என்று தோன்றுகிறது. பலரின் எதிர்பார்ப்பையும் நாளுக்கு நாள் எகிற வைத்துக் கொண்டிருக்கிறது “ரைட்டர்”.  இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் வெளியீடாக இம்மாதம் 24ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

ALSO READ | ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையும் விஷால்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

Trending News