தளபதியுடன் இணைந்த காமெடி நடிகர்... விஜய் 66 அப்டேட்

நடிகர் யோகிபாபு 5ஆவது முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 4, 2022, 05:13 PM IST
  • விஜய்யுடன் இணையும் காமெடி நடிகர்
  • ஐந்தாவது முறையாக விஜய்யுடன் இணைகிறார் யோகிபாபு
  • ஹைதராபாத் சென்றார் நடிகர் விஜய்
தளபதியுடன் இணைந்த காமெடி நடிகர்... விஜய் 66 அப்டேட் title=

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து அவர் வம்சி இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஜய் 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

தமன் இசையமைக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க நடிகர் ஷ்யாம் விஜய்யின் சகோதரராக நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.

Thalapathy 66

இதற்கிடையே படம் குடும்ப ரசிகர்களுக்கு பிடிக்கும்விதமாக உருவாக்கப்படுமெனவும், ரசிகர்களுக்கு தேவையான அத்தனை விஷயங்களும் படத்தில் இருக்குமெனவும் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் விஜய் 66 படத்தில் யோகிபாபு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய்யுடன் மெர்சல், சர்கார், பிகில், பீஸ்ட் ஆகிய நான்கு படங்களில் நடித்திருக்கிறார். விஜய் 66 படம் குறித்து யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உறுதி செய்திருக்கிறார். அதேசமயம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.

 

முன்னதாக சென்னையில் ஷூட்டிங்கை முடித்த படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளது. அந்த சமயத்தில் ஹைதராபாத் ஏர்போர்ட்டில் விஜய் சென்ற வீடியோவையும் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

மேலும் படிக்க | பரிவார்களின் பலி ஆடுகளா பாவலர் சகோதரர்கள் - திருமாவளவன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News