LIC படத்தில் இணைந்த ஆன்லைன் பிரபலம்-ஐயோ இவரா! வேதனையில் ரசிகர்கள்..

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.சி படத்தில் ஆன்லைன் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jun 19, 2024, 04:26 PM IST
  • எல்.ஐ.சி படத்தின் அப்டேட்
  • இணையதள பிரபலம் ஒருவர் நடிக்கிறார்
  • அவர் யார் தெரியுமா?
LIC படத்தில் இணைந்த ஆன்லைன் பிரபலம்-ஐயோ இவரா! வேதனையில் ரசிகர்கள்.. title=

தமிழ் திரையுலகில், ஹீரோக்கள் இயக்குநர்களாவதும், இயக்குநர்கள் ஹீராேக்களாவதும் வாடிக்கையாகி வருகிறது. அப்படி, முழு நேர ஹீரோக்களாக மாற முடியாத இயக்குநர்கள் கேமியோ ரோல்களில் நடித்து புகழ் பெருகின்றனர். அமீர், ராம், எஸ்.ஜே.சூர்யா, சசிகுமார், சமுத்திரகனி, சுந்தர் சி, சேரன், பார்த்திபன் உள்ளிட்டோர் தற்போது குணச்சித்திர நடிகர்களாக வலம் வருகின்றனர். இதில் ஒரு சிலர் ஹீராேவாகவும் இருக்கின்றனர். இந்த லிஸ்டில் புதிதாக இணைந்திருப்பவர்தான், பிரதீப் ரங்கநாதன்.

‘கோமாளி’ பிரதீப் ரங்கநாதன்:

2019ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற படங்களுள் ஒன்று, கோமாளி. இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார். 16 வருடங்கள் கோமாவில் இருந்து விட்டு திரும்பியவன், தன்னை சுற்றி இருக்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல் தவிப்பதுதான் படத்தின் கதையாக இருந்தது. இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் ஆட்டோ ஓட்டுபவராக வருவார், பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்திருந்த படம், லவ் டுடே. 

நவீன உலகில் காதலும்-காதலர்களும் எப்படியிருக்கின்றனர் என்பதை வைத்து எடுக்கப்பட்டிருந்த படம்தான், லவ் டுடே. இதில், இவருக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். இப்படம வெற்றி பெற்றிருந்தாலும், இதில் இடம் பெற்றிருந்த சில காட்சிகள் மற்றும் வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இருப்பினும் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இதை, பிரதீப் ரங்கநாதனே இயக்கி நடித்திருந்தார். முதல் முறையாக ஹீரோவாக நடித்தருந்த அவருக்கு ரசிகர்களின் வரவேற்பும் பயங்கரமாக இருந்தது. 

எல்.ஐ.சி திரைப்படம்:

‘நானும் ரவுடிதான்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது இயக்கி வரும் படம்தான், எல்.ஐ.சி. லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற படத்தின் சுறுக்கம்தான் ஆங்கிலத்தில் LIC என்று அழைக்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு, சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்தது. இந்த படத்தில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார். இதில், புதிதாக ஒரு ஆன்லைன் பிரபலம் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் யார் தெரியுமா? 

மேலும் படிக்க | பிரபல பாடகிக்கு வந்த காது கேளா பிரச்சனை! ஹெட்ஃபோன்ஸால் வந்த வம்பா?

டிஜிட்டல் பிரபலம்!

இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்படுவதற்கு முன்னர், அதில் பிரபலமாக இருந்தவர்களுள் ஒருவர், காத்துக்கருப்பு கலை. இந்த செயலில் அடிக்கடி நகைச்சுவையான வீடியோ போடுகிறேன் என்ற பெயரில் கிறுக்கத்தனமாக பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. டிக்டாக் சென்று, ரீல்ஸ் ட்ரெண்ட் மாற, அதற்கு ஏற்றார் போல தன்னையும் மாற்றிக்கொண்டார் காத்துக்கருப்பு கலை. 

Kaathukaruppu Kalai

தற்போது, இவர் ஒரு பிரபல யூடியூப் சேனலில் செலிப்ரிட்டிகளை நேர்காணல் செய்யும் தொகுப்பாளராக இருக்கிறார். இதில் நகைப்பூட்டும் விஷயம் என்னவென்றால், இவருக்கு யார் நேர்காணலுக்கு வருவார்கள் என்று முன்கூட்டியே கூற மாட்டார்கள். இவர் ஏதேனும் உளறி அவர்களிடம் பேச, அவர்கள் ஏதேனும் கோபமாக பேச..அதுவே பெரிய கண்டெண்டாக மாறும். அது மட்டுமன்றி அவ்வப்போது கான்செப்ட் வீடியாேக்களையும் செய்து வருகிறார். இவர் ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இவரும் எல்.ஐ.சி படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள், “ஐயோ..இவரா..” என்று அலறி வருகின்றனர். 

மேலும் படிக்க | கண்கள் முழுவதும் காதல்..நயன்-விக்கியின் புதிய புகைப்படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News