கனா சீரியல் அப்டேட்: தேர்தலில் ஜெயித்த அன்பரசி.. அனன்யாவுக்கு ஜானகி கொடுத்த அதிர்ச்சி!

Kanaa Serial This Week Episodes: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் கனா தொடரில், வரும் வாரத்தில் என்ன நடக்கும், அன்பரசி - அனன்யா ஆகியோருக்கு இடையேயான போர் எப்படி மாற்றமடைகிறது ஆகியவை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 27, 2023, 02:50 PM IST
  • அன்பரசி - அனன்யா ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர்.
  • அவர்கள் போட்டியிட்ட தேர்தல் முடிவுகள் வெளியானது.
  • ஜானகி பாட்டி அனன்யாவுக்கு அதிர்ச்சி வைத்தியத்தை அளித்தார்.
கனா சீரியல் அப்டேட்: தேர்தலில் ஜெயித்த அன்பரசி.. அனன்யாவுக்கு ஜானகி கொடுத்த அதிர்ச்சி! title=

Kanaa Serial This Week Episodes​: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சின்னதிரை தொடர், 'கனா'. இந்த தொடரில், கடந்த வாரம் அனன்யா மற்றும் அன்பரசி ஆகியோர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

ஒரு மாதம் சஸ்பெண்ட்

அதாவது, நடந்து முடிந்த தேர்தலில் அன்பரசி வெற்றி பெற, அனன்யா அதிர்ச்சி அடைகிறார் என தெரிய வந்துள்ளது. அனன்யா தேர்தலில் தோற்ற கடுப்பில் இருக்கும் நேரத்தில், ஜானகி பாட்டி பார்ட்டியை ஏற்பாடு செய்து அன்பரசியை சிக்க வைத்த அனன்யாவை ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்வதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். 

Kanaa

மேலும் படிக்க | மீனாட்சி பொண்ணுங்க சீரியல்: சக்திக்கு வந்த பரிதாப நிலை.. வெற்றி கல்யாணத்தில் என்ன நடக்கும்?

அன்பரசியை புண்படுத்திய அனன்யா

ஆனால் அன்பரசி முதல் கோரிக்கையாக அனன்யாவை மன்னிக்க வேண்டும் என சொல்ல இதனால் இன்னும் கோபமாகும் அனன்யா அன்பரசியிடம் சண்டையிடுகிறார். 'அவள் உன்னுடன் தோழியாக பழக, என்ன செய்ய வேண்டும்' என கேட்க 'செத்து போ' என சொல்லி அனன்யா ஷாக் கொடுக்கிறாள். 

பாட்டியின் அதிர்ச்சி வைத்தியம்

அதன் தொடர்ச்சியாக அனன்யா வீட்டுக்கு வந்ததும் ஜானகி பாட்டி அவளது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எல்லாவற்றையும் உடைத்து போட்டு இனி உனக்கு ஒருநாளைக்கு 50 ரூபாய் தான் தருவேன் என சொல்ல அனன்யாவுக்கு, அன்பரசி மீதான கோவம் இன்னும் அதிகமாகிறது. 

விபத்து 

இது ஒருபுறம் இருக்க, ராமசந்திரன் வீட்டில் மல்லிகா என்ற பெயரில் இருந்து வருவது கஸ்தூரி தான் என அவருக்கு தெரிய வருகிறது. இதனை அவர் சந்திரசேகரிடம் தெரியப்படுத்த முடிவெடுக்கிறார். சிவகாமி செய்த சதியால் அவரால் சந்திரசேகரை தொடர்பு கொள்ள முடியாமல் போகிறது. எனவே, உண்மையை சொல்ல சென்னை கிளம்பி வருகிறார். வரும் வழியில் அவருக்கு ராஜவேலுவால் விபத்து ஏற்படுகிறது. 

Kanaa

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் 'கனா' சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே கனா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மறக்காமல் கண்டு களியுங்கள். மேலும், இதனை Zee 5 ஓடிடியிலும் நீங்கள் காணலாம்.  

மேலும் படிக்க | நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகர் விஷால்..இதுதானா காரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News