கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நிஃபா வைரஸ் தாக்கத்தால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களிடையே பரவி வருகிறது. இந்த வைரஸ் மூலம் பரவும் நோயை எப்படி குணப்படுத்துவது என்று தெரியாமல் மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, கேரளாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், சிகிச்சைக்கு வரும் அனைவரிடமும் இந்த நிஃபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின் உடல்களில் உள்ள அனைத்து செய்ல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது. இந்த நிபா வைரஸ் தாக்கி கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக, கேரளாவில் ஒருவர் 18 நாட்களுக்கு முன்பு இந்த வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் வரிசையாக நிறைய பேர் இந்த வைரஸ் தாக்குதலுடன் அனுமதிக்கப்பட்டதாக ''நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி'' தெரிவித்துள்ளது.
Kerala: One more death reported due to #NipahVirus, in Calicut. Death toll rises to 14.
— ANI (@ANI) May 27, 2018
இதையடுத்து, தற்போது கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். நிஃபா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது!