மத்திய பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான IIT, IIIT, NIT போன்ற உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பொறியியல் பட்டப்படிப்பு , இளநிலை தொழில்நுட்பம் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு JEE எனப்படும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். முதல்கட்டமாக நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில் பங்கேற்க சுமார் 8.7 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், ஜே.இ.இ முதல் நிலைத் தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தமிழக அளவில் கோவை மாணவி தீக் ஷா முதலிடம் பிடித்தார்.
இதில், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் இந்தியாவில் நடத்தப்பட்ட பொறியியல் கூட்டு நுழைவுத் தேர்வில் (JEE) 99.72 பர்சன்டைல் மதிப்பெண் பெற்று மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். உலகின் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும், JEE மூலம், விண்ணப்பதாரர்களுக்கு இந்தியாவில் உள்ள சில முதன்மையான கல்வி நிறுவனங்களில் சேர வாய்ப்பளிக்கிறது.
99.72 பர்சண்டைல் மதிப்பெண் பெற்ற ஆர்யன் முரளிதரன், பிராந்தியத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் ஒருவராக உள்ளார். அவர் தான் சேர விரும்பும் கல்லூரியில் இடம் கிடைக்கும் எனற நம்பிக்கையில் உள்ளார். கம்பூட்டர் சயின்ஸ் படிக்க விருப்பம் தெரிவித்துள்ள அவர், தான் பெற்ற மதிப்பெண்ணிற்கு, தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) ஒன்றில் நான் விரும்பிய படிப்பை படிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தற்போது ஜேஇஇ அட்வான்ஸ்டுக்கு தயார் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறேன் எனக் கூறிய அவர், நல்ல ரேங்க் எடுத்து, சென்னை ஐஐடியில் படிக்க விரும்புகிறேன் என்கிறார்.அது கிடைக்காவிட்டால், NIT சூரத்கல்லில் படிக்க விரும்புவதாக குறிப்பிட்டார்.
துபாயில் உள்ள மிலேனியம் பள்ளியின் 17 வயது மாணவர், போட்டித் தேர்வுக்குத் தயாராவதற்காக ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாகப் படித்ததாகக் கூறினார். "நான் காலை 7 மணிக்கு எழுந்து இரவு 10 மணி வரை, சிறிய அளவில் அவ்வப்போது பிரேக் எடுத்துக் கொண்டு படிப்பேன்," என்று அவர் கூறினார்.
ஜேஇஇ தேர்வுகள் இரண்டு பகுதிகளாக நடத்தப்படுகின்றன- ஜேஇஇ மெயின்ஸ் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு. ஜேஇஇ மெயின் தேர்வு எழுதும் மாணவர்கள் அதை எழுத இரண்டு முறை அனுமதிக்கப்படும். இந்த ஆண்டு 8,70,000 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில், 224,000 மாணவர்கள் மட்டுமே ஜேஇஇ அட்வான்ஸ்டு எழுத தகுதி பெற்றுள்ளனர். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் உள்ள 23 இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) கல்லூரிகளில் ஒன்றில் படிக்க விரும்புகிறார்கள்.
மேலும் படிக்க: UIDAI JOBS: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வேலைவாய்ப்பு: முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR