துபாய் லக்கி டிராவில் 1 மில்லியன் டாலர் வென்ற இந்தியர்

Dubai Duty Free Draw: அதிர்ஷ்டம் இருந்தால் கூரையை பிய்த்துக்கொண்டு பணம் கொட்டும் என்று சொல்வதுண்டு. துபாயில் வசிக்கும் இந்தியரின் வாழ்வில் அது உண்மையாகியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 21, 2022, 06:07 PM IST
  • துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரெஹோபோத் டேனியலுக்கு அடித்தது ஜாக்பாட்.
  • கடந்த 20 ஆண்டுகளாக டேனியல் மில்லினியம் மில்லியனர் ப்ரொமோஷனில் பங்கேற்று வருகிறார்.
  • 63 வயதான டேனியல் ஒரு புத்தக கடையின் உரிமையாளர் ஆவார்.
துபாய் லக்கி டிராவில் 1 மில்லியன் டாலர் வென்ற இந்தியர்  title=

அதிர்ஷ்டம் இருந்தால் கூரையை பிய்த்துக்கொண்டு பணம் கொட்டும் என்று சொல்வதுண்டு. துபாயில் வசிக்கும் இந்தியரின் வாழ்வில் அது உண்மையாகியுள்ளது. அதே அதிர்ஷ்டத்துடன் துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரெஹோபோத் டேனியல், டூட்டி ஃப்ரீ டாலர் மில்லியனர்களின் நீண்ட பட்டியலில் சேர்ந்தார். டிக்கெட் எண் 1002 அவருக்கு அதிர்ஷ்ட எண்ணாக அமைந்தது. கடந்த 20 ஆண்டுகளாக டேனியல் மில்லினியம் மில்லியனர் ப்ரொமோஷனில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 63 வயதான டேனியல் ஒரு புத்தக கடையின் உரிமையாளர் ஆவார். 

துபாயில் வசிக்கும் டேனியல், இந்த லாட்டரியில் அவருக்கு கிடைத்த பெரிய தொகை அவரை மகிழ்ச்சியின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. “இந்த அருமையான வாய்ப்புக்கு துபாய் டூட்டி ஃப்ரீக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் ப்ரொமோஷன் பலருக்கு உதவியாக உள்ளது. எனவே இது நீண்ட காலம் தொடர பிரார்த்திக்கிறேன்” என்று டேனியல் கூறியுள்ளார். 

வாழ்க்கையை மாற்றவல்ல பம்பர் செய்தியை பெற்ற மற்றொரு அதிர்ஷ்டசாலி திரு முகமது கரமன் ஆவார். டிக்கெட் என் 4789-ஐ கொண்டிருந்த இவர் மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 395 இல் அவர் 1 மில்லியன் தொகையை வென்றார். 

மேலும் படிக்க | UAE: 3 இந்தியர்களுக்கு அடித்தது ஜாக்பாட், இரே இரவில் லட்சாதிபதி ஆனார்கள்!! 

சவூதி அரேபியாவின் ரியாத்தில் வசிக்கும் 40 வயதுடைய சிரிய நாட்டவரான கரமானுக்கு இந்த மகிழ்ச்சிகரமான செய்தி ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் வந்தது. இவரும் இந்த லாட்டரி வெற்றி குறித்து மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

தனக்கு அடித்த லாட்டரி குறித்து தன் மன நிலையை வெளிப்படுத்திய அவர், “இது உண்மையில் ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியம். மேலும் எனது குடும்பத்தினரும் நானும் துபாய் டூட்டி ஃபிரீ நிறுவனத்திற்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். இறுதியாக வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிலேனியம் மில்லியனரில் தொடர்ந்து பங்கேற்பேன்! இந்த நாளை எனக்கு பரிசாக அளித்த குழுவைச் சந்திக்க காத்திருக்கிறேன்” என்று கூறினார். 

துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் ப்ரொமோஷன் 1989 இல் தொடங்கப்பட்டதில் இருந்து அதை வென்ற 8 ஆவது சிரிய நாட்டவர் கரமன் ஆவார்.

ஐக்கிய அரபு அமீரக நாட்டவரான ர்ஷீத் அல் ஷெமேலி, தனது கனவுக் காரான Mercedes Benz AMG GT 43 (Graphite Grey Metallic) ஐ சீரிஸ் 1810 இன் மிகச்சிறந்த சர்ப்ரைஸ் சொகுசு கார் டிராவில் வென்றார். இவரது டிக்கெட் எண்  0465 ஆகும். அவர் 25 ஜூன் 2022 அன்று ஆன்லைனில் இந்த காரை வாங்கினார்.

அபுதாபியில் வசிக்கும் 40 வயதான எலக்ட்ரானிக் இன்ஜினியர், அல் ஷெமிலி, துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லினியம் மற்றும் ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் ப்ரோமோஷன்களில் தொடர்ந்து பங்கேற்பவர் ஆவார். இப்போது துபாய் டூட்டி ஃப்ரீ குழுவைச் சந்தித்து தனது நன்றியைத் தெரிவிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்.

துபாயில் வசிக்கும் 41 வயதான இந்திய நாட்டவரான சஞ்சீவ் ஷர்மாவுக்கும் எதிர்பாராத ஒரு அதிர்ஷ்டம் அடித்தது. அவருடைய டிக்கெட் எண். 0668 -க்கு ஒரு ஸ்போர்ட்டியான BMW F 850 ​​GS மோட்டார் பைக் பரிசாக கிடைத்தது. ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் சீரிஸ் 505 இல் அவர் இந்த பரிசை வென்றார். 

மேலும் படிக்க | UAE: இந்தியருக்கு வந்த அரிய வகை நோய்க்கு சிகிச்சை அளித்து மருத்துவர்கள் சாதனை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News