UAE வாகன ஓட்டிகள் கவனத்திற்கு; இந்த விதிகளை மீறினால் கடும் அபராதம்

துபாயில் வாகனம் ஓட்டும்போது தொலைபேசியைப் பயன்படுத்தினாலோ  அல்லது உங்கள் காரில் இருந்து குப்பைகளை வீசினாலோ, 1,000 திர்ஹம் அபராதத்தை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல், உங்கள் உரிமத்தில் கருப்பு புள்ளிகளையும் பெறலாம்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 26, 2022, 06:18 PM IST
  • காரை சாலையின் நடுவில் நிறுத்துதல்.
  • சிவப்பு விளக்கை மீறி செல்லுதல்.
  • வேறு ஒருவருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பார்க்கிங்.
UAE வாகன ஓட்டிகள் கவனத்திற்கு; இந்த விதிகளை மீறினால் கடும் அபராதம் title=

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கூட்டாட்சி போக்குவரத்து சட்டத்தின் கீழ் 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் போக்குவரத்து மீறல்களின் பட்டியலை இங்கே காணலாம்.

1. அதிகபட்ச வேக வரம்பை மீறுதல்

சாலையின் அதிகபட்ச வேக வரம்பு - ஒவ்வொரு சாலையிலும் உள்ள சைன்போர்டுகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் - 60 கிமீ / மணி மற்றும்  110 கிமீ / மணி  என குறிப்பிடப்பட்டிருக்கும். அதிக வேகத்தில் ஓட்டினால், உங்களுக்கு 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

2. கார் விபத்துக்கு அருகில் கூட்டம்

வாகன விபத்தை நீங்கள் கண்டால், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் கூட்டத்தை கூட்ட வேண்டாம். மாறாக, காவல்துறையின் அவசர எண்ணை - 999-க்கு அழைப்பதே சிறந்தது. விபத்து நடந்த இடத்திற்கு அருகில் கூட்ட நெரிசல் ஏற்பாட்டால், ஆம்புலன்ஸ்கள், அவசர ஊர்திகள், மற்றும் சிவில் பாதுகாப்பு ஆகியவை விபத்து நடந்த இடத்தை சரியான நேரத்தில் அடைவதைத் தடுக்கிறது. அபுதாபி காவல்துறையின் கூற்றுப்படி, விபத்து நடந்த இடங்களில் கூடினால் அபராதம் 1,000 திர்ஹம் ஆகும்.

3. ஹார்ட் ஷோல்டரில்  இருந்து முந்துதல்

ஹார்ட் ஷோல்டர்  என்பது சாலையின் தீவிர வலது அல்லது இடதுபுறத்தில் உள்ள பாதைகள், அவை மஞ்சள் கோடுகளால் தெளிவாகக் குறிக்கப்படுகின்றன. இதில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

4. வேறு ஒருவருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பார்க்கிங்

வேறு ஒருவருக்காக  ஒதுக்கப்பட்ட பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு அபராதம் 1,000 மற்றும் ஆறு கருப்பு புள்ளிகள்.

5. பள்ளி பேருந்து நிறுத்தப் பலகையின் முன் நிறுத்தத் தவறுதல்

அனைத்து வாகன ஓட்டிகளும் பள்ளிப் பேருந்தில் 'நிறுத்து' பலகை வைக்கப்படும் போதெல்லாம் வாகத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும்.  மாணவர்களை பாதுகாப்பாக கடக்க ஐந்து மீட்டருக்கு குறையாத தூரத்தை பராமரிக்க வேண்டும். மீறுபவர்களுக்கு உரிமத்தில் 10 கருப்பு புள்ளிகள் மற்றும் 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் படிக்க | UAE: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு; உம் அல் குவைனில் புதிய வேக கண்காணிப்பு ரேடார்கள்

6. சிவப்பு விளக்கை மீறி செல்லுதல்

போக்குவரத்து சிக்னல் சிவப்பு நிறமாக மாறுவதற்கு முன்பே அதை வேகமாக கடக்க முயற்சிப்பது ஆபத்தான நடைமுறையாகும். உங்கள் உயிருக்கும் மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், 1,000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் போக்குவரத்துச் சட்டத்தின்படி, உங்கள் வாகனம் 30 நாட்களுக்குப் பறிமுதல் செய்யப்படும் மற்றும் உங்கள் ஓட்டுநர் உரிமத்தில் 12 கருப்புப் புள்ளிகள் பதிவு செய்யப்படும்.

மேலும் படிக்க | அபுதாபி வாழ் தமிழர்களே அலர்ட்: இன்று முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை 

7. உங்கள் காரில் இருந்து குப்பை கொட்டுதல்

உங்கள் காருக்கு வெளியே  குப்பைகளை எறியும் செயலுக்கு 1,000 திர்ஹம் அபராதமும் கூடுதலாக ஆறு கருப்பு புள்ளிகளும் விதிக்கப்படலாம்.

8. வாகனத்தில் செல்லும் போது திடீர் என திருப்புதல் அல்லது விலகிச் செல்லுதல்

வாகனம் ஓட்டும் போது திடீரென்று திருப்புவது கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வாகனத்தின் திடீர் திருப்புதலுக்கான அபராதம் 1,000 திர்ஹம்.

9. உங்கள் காரை சாலையின் நடுவில் நிறுத்துதல்

சாலையின் நடுவில் பழுதடைந்த கார்களுக்கு இந்த விதிமீறல் பொருந்தாது. ஆனால் எந்த காரணமும் இல்லாமல் உங்கள் வாகனத்தை சாலையின் நடுவில் நிறுத்தினால், நீங்கள் 1,000 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மங்கிபாக்ஸ் சோதனை: அரசு அறிவிப்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News