அடுத்த இரண்டு மாதங்கள் இப்படித்தான் இருக்கும் - இலங்கை பிரதமர் ரணில்

அடுத்த இரண்டு மாதங்கள் இப்படித்தான் இருக்கும் - இலங்கை பிரதமர் ரணில்

Written by - க. விக்ரம் | Last Updated : May 16, 2022, 09:22 PM IST
  • ரணில் விக்ரமசிங்கே பேச்சு
  • மக்களிடம் பிரதமர் உரை
  • இலங்கை நிலவரம் குறித்து ரணில் விக்ரமசிங்கே
அடுத்த இரண்டு மாதங்கள் இப்படித்தான் இருக்கும் - இலங்கை பிரதமர் ரணில் title=

லங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ராஜபக்ஷே பதவியிலிருந்து விலகினார். மேலும், அவர் மீது ஆத்திரமடைந்த மக்கள் அவரது வீட்டுக்கு தீ வைத்தனர். தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் அவர் இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றுகையில், “நான்கில் ஒரு பங்கு மின்சாரம் எண்ணெய் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், தினமும் 15 மணி நேரமாக மின்வெட்டு அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

இருப்பினும், இந்த நெருக்கடியைத் தவிர்க்க நாங்கள் ஏற்கனவே பணம் பெற்றுள்ளோம். நுகர்வோருக்கு எரிவாயுவை வழங்க 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாங்கள் உடனடியாகப் பெற வேண்டும். ஒருநாளுக்கு மட்டும்தான் பெட்ரோல் இருப்பு இருக்கிறது.

Ranil

இந்திய கடன் உதவியின் கீழ் மே 19, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 2 டீசல் கப்பல்களும், மே 18, மே 29 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வரவுள்ளன.

நாங்கள் பல கடுமையான கவலைகளை எதிர்கொண்டுள்ளோம். இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது.  தற்போது இலங்கையின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார்மயமாக்க நான் முன்மொழிகிறேன். 

2022ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட அபிவிருத்தி வரவு செலவுத் திட்டத்திற்கு மாற்றாக புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க திட்டமிட்டுள்ளோம். அதனை சலுகை வரவு செலவுத் திட்டமாக முன்வைக்க உத்தேசித்துள்ளோம்.

Rajapaksa

நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. என்னிடம் கைப்பிடி இல்லை,  என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன். 

தற்போதைய பிரச்னைகளை தீர்க்க அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபை அல்லது அரசியல் கூட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை அவசரமாக உள்ளது. தற்காலிக, நிரந்தர திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.அடுத்த 2 மாதங்கள் நமக்கு கடுமையானதாக இருக்கும்” என்றார். இதனால் இலங்கை மக்கள் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News