ஷார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த, இந்திய வம்சாவளியை சேர்ந்த 40 வயதான ஒருவர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஷார்ஜாவிலிருந்து தாய் நாட்டிற்கு திரும்பி வந்த உடனேயே உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விமானம் நடு வானில் பயணித்துக்கொண்டிருந்த போது, பைசல் என்ற அந்த நபரின் உடல்நலம் கெட்டது. சனிக்கிழமையன்று கேரளாவில் விமானம் தரையிறங்கியவுடனேயே அவர் உயிர் இழந்ததாக செய்திகள் தெரிவித்தன.
பேக்கரி நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்த முகமது பைசலுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சனிக்கிழமை காலை அவர் பயணித்த விமானம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உடல்நிலை மோசமானது. விமான நிலையத்தில் அவரை வரவேற்க அவரது குடும்பம் காத்துக்கொண்டிருந்தது.
ஷார்ஜாவிலிருந்து கோழிக்கோடு செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் AI998 விமானம் இலக்கை அடையவிருந்தபோது மருத்துவ அவசரநிலை ஒன்று ஏற்பட்டதாக விமானத்தின் கேப்டன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. விமானத்தில் ஒரு பயணிக்கு உடல் நிலை சரியில்லை என்றும், விமானம் தரை இறங்கிய உடனேயே அவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வாகனமும் தயாராக விமான நிலையத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தமிழக பெண்களை குறிவைக்கும் சிங்கப்பூர் போலீஸ் - தாலி கட்டி கைவரிசை!
பைசலின் உடல் நிலை நடுவானில் மோசமானபோது, அவரை சரி செய்ய விமானத்தில் இருந்த ஒரு மருத்துவர் முயற்சி செய்துள்ளார். எனினும், பைசல் ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். விமானம் தரை இறங்கியவ்டன் அவர் ஸ்ட்ரெச்சரில் ஆம்புலன்சுக்கு மாற்றப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், துரதிஷ்டவசமாக மருத்துவமனைக்குச் சென்ற பிறகு அவர் உயிரிழந்தார்.
ஷார்ஜாவில் உள்ள பைசலின் உறவினர் ஒருவர் கூறுகையில், பைசலுக்கு மூளை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. மூன்று வருடங்களாக பைசல் வீட்டிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் அறுவை சிகிச்சை மற்றும் மேலதிக சிகிச்சைக்காக வீட்டிற்கு செல்ல விரும்பியதாக அவரது உறவினர் தெரிவித்தார்.
ஃபைசலின் வருகைக்காக அவரது மனைவி அபிதா மற்றும் அவரது மகன்கள் ஃபாதி, 12, மற்றும் ஃபாஸ், 6, ஆகியோர் விமான நிலையத்தில் காத்திருந்தனர். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் அவருடன் வந்த அவரது நண்பரை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அப்போதுதான் ஃபைசலுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதும் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதும் அவர்களுக்கு தெரிய வந்தது.
பைசலின் இறப்பு அவரது குடும்பத்திற்கு பெரும் இடியாய் விழுந்துள்ளது. அவரது சொந்த ஊரான மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தனுரில் சனிக்கிழமை மாலை அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பெரும் கூட்டம் கூடியது.
மேலும் படிக்க | ஆபத்தை உணராமல் இடம்பெயர முற்படும் இலங்கை மக்கள்; எச்சரிக்கும் கடற்படையினர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR