சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழர்களுக்கும், அங்கு வேலை செய்ய காத்திருக்கும் அனைவருக்கும் ஒரு முக்கிய செய்தி. தொழிலாளர் நலன் கருதி, சிங்கப்புரின் அமைச்சகங்கள் மற்றும் சில அமைப்புகள் இணைந்து சில செயல்முறைகளை முன்னெடுத்துள்ளன.
சிங்கப்பூரின் பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கவுன்சில், மனிதவள அமைச்சகம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் இன்னும் சில அமைப்புகள் ஒன்றிணைந்து சேஃப்டி டைம்-அவுட் எனப்படும் பணியிட பாதுகாப்பு சோதனை நடத்தபப்ட வேண்டும் என நிறுவனங்களுக்கு கூறியுள்ளன. இந்த செயல்முறை மே 9 முதல் அமலுக்கு வந்துள்ளது.
சேஃப்டி டைம் அவுட் என்றால் என்ன?
பணியிடத்தில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கிக்கொடுப்பதும், அவற்றை தொடர்ந்து கண்காணிப்பதும், அதற்காக நேரம் ஒதுக்கி அந்த செயல்முறைகளின் ஒழுங்கான செயல்பாட்டை உறுதிசெய்வதும் சேஃப்டி டைம்-அவுட்டின்
முக்கிய அம்சங்களாகும்.
சேஃப்டி டைம் அவுட் நேரத்தில், தங்கள் பணியை நிறுத்திவிட்டு, டபிள்.யுஎஸ்.எஹ் எனப்படும் பாதுகாப்பு மற்றும் சுகாதார செயல்முறைகளை வலுப்படுத்துவதில் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஈடுபடுவதை நிர்வாகதினர் உறுதி செய்ய வேண்டும். இந்த செயல்முறையின்போது, பாதுகாப்பு பிரச்சனைகள் கண்டறியப்பட்டால், உடனடியாக அவை சரிசெய்யப்பட வேண்டும்.
பணியிடத்தில் பாதுகாப்பு செயல்பாடுகளின் குறைபாட்டால், கடந்த காலங்களில் விபத்துகள் நடந்திருக்கலாம். அவ்வாறு நடந்த விபத்துகளில் கற்றுக்கொண்ட பாடங்கள், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என அனைத்தையும் நிர்வாகம் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதுவும் சேஃப்டி டைம்-அவுட்டின் ஒரு அங்கமாகும்.
மேலும் படிக்க | அபுதாபி விமான நிலையம்: பயணர்கள் வருகையில் ஏற்றம், முதலிடத்தில் இந்தியர்கள்
பணியிட பாதுகாப்பு என்ற அம்சத்தில் சிங்கப்பூர் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. அங்கு இருக்கும் தொழிற்சாலைகளின் ஏற்னகனவே பலவித முன்னெச்சரிகை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2011 ஆம் ஆண்டு 100,000 தொழிலாளர்களுக்கு 2.3 ஆக இருந்த பணியிட இறப்பு விகிதம்ம், 2021 ல் 1.1 ஆக, அதாவது பாதியாகக் குறைந்தது. உலக அளவில், நான்கு நாடுகள் மட்டுமே 100,000 தொழிலாளர்களுக்கு 1.0-க்கும் குறைவான இறப்பு விகிதத்தை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், சமீபத்தில் சிங்கப்பூரில் பணியிட இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசு பல துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 10 பேர் பணியிட விபத்துக்களால் இறந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிகின்றன.
இந்த அதிகரிப்பை கட்டுப்படுத்த, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பூர் அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வது, பணியிட பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது ஆகியவை பற்றி பணியாளர்கள் முழுமையாக புரிந்துகொள்வதை உறுதிசெய்ய நிர்வாகம் சேஃப்டி டைம்-அவுட் (எஸ்டிஓ) முறையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | துபாய் தமிழர்களுக்கு சூப்பர் செய்தி: விமான டிக்கெட் விலையில் பம்பர் தள்ளுபடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR