பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சர்

பழனி முருகன் கோவில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட ஒழுங்கு துறை அமைச்சர் காசிவிஸ்வநாதர் சண்முகம் சாமி தரிசனம் செய்தார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 14, 2022, 02:12 PM IST
பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் title=

பழனி முருகன் கோவிலுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த உள்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் காசி விஸ்வநாதர் சண்முகம் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். பழனிக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய சிங்கப்பூர் அமைச்சர் மலை அடிவாரத்திலிருந்து ரோப்கார் மூலமாக மலைமீது அழைத்துச் செல்லப்பட்டார். சாமி தரிசனம் செய்த பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. 

பின்னர் மலைக்கோயிலுக்கு சரக்கு வாகனம் ஒன்றை சிங்கப்பூர் அமைச்சரும், டிவிஎஸ் கம்பெனி உரிமையாளருமான சுதர்சன் வேணுவும் இணைந்து காணிக்கையாக வழங்கினார்.

பழனி முருகன் கோவில் முருகனது அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இங்குள்ள நவபாஷாணத்தினால் ஆன முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவிலேயே திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் வருகை தரும் கோவிலாக பழனி முருகன் கோவில் உள்ளது.

மேலும் படிக்க | மகிந்த ராஜபக்ச இங்குதான் உள்ளார், நலமாக உள்ளார்: இலங்கை பாதுகாப்பு செயலாளர்

இதற்கிடையில், வரும் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதியன்று பிரதமர் லீ சியன் லூங் தேசிய தின உரையை ஆற்றவுள்ளார். இது குறித்து சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அந் நிகழ்வு அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தலைமை நிலையத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 

மேலும் பிரதமரின் தேசிய தின உரை இவ்வாண்டின் ஆக முக்கியமான அரசியல் உரையாகக் கருதப்படுகிறது. குறிப்பாக ஆளும் மக்கள் செயல் கட்சியின் அடுத்த தலைமுறைத் தலைவராக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் சென்ற மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமரின் உரை கூடுதல் முக்கியத்துவம் பெறும் எனச் சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க | இலங்கையிலிருந்து தப்பித்த சிறை கைதிகள் - தமிழகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News