வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் உறுதி

வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்த்துள்ளார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 11, 2022, 12:15 PM IST
  • வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்களிக்க நடவடிக்கை.
  • தமிழக சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.வி. செழியன் கேள்வி எழுப்பினார்.
  • வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இது குறித்து விளக்கமளித்தார்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் உறுதி title=

சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி உள்ளது. வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்த்துள்ளார். 

நேற்று தமிழக சட்டப்பேரவையில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இது குறித்து விளக்கமளித்தார். சட்டப்பேரவையில் நேற்றைய கேள்வி நேரத்தின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.வி. செழியன், வெளிநாடு வாழ் தமிழர்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஒரு முறையான வரையறையை உருவாக்க வேண்டும் என்று கூறியதோடு, இதற்கான தகவல்கள் மற்றும் நிர்ணயங்களை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறுவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், வெளிநாடு வாழ் தமிழர்களின் வாக்குகளிப்பதற்கான உரிமையை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற துறை சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

மேலும் படிக்க | இந்திரா நூயி: அயலகம் சென்று அரியணை சூடி புகழின் உச்சம் தொட்ட தமிழ் பெண் 

மேலும், கொரோனா காலத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இல்லத்திற்தே சென்று வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கும், அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

இந்தியாவில், தமிழகத்தில் பிறந்து உலகெங்கிலும் தங்கள் புகழையும் நாட்டின் பெருமையையும் பரப்பியவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அதே நேரத்தில் இந்திய மண்ணில் பிறந்து அயல் நாட்டுக்கு சென்று அங்கு இந்தியாவின் புகழையும் பெயரையும் நிலைநாட்டியவர்களும் ஏராளமானோர் உள்ளனர்.

அதிகமான தமிழர்கள் வெளி நாடுகளில் இன்று வசித்து வருகின்றனர். அவர்களது உரிமைகளை காத்திடும் பொருட்டு, குறிப்பாக, வெளிநாடுகளின் குறைந்த வருமானம் பெறும் நபர்களின் நலனுக்காக, வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக தனியாக ஒரு நிர்வாகப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. மறுவாழ்வுத் துறை, மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையரகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்களின் நலன் கருதி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் படிக்க |  பற்றி எரிகிறது இலங்கை; போராட்டக்காரர்களை தாக்கிய அரசு ஆதரவாளர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News