Ambulance-ல் இருந்து நடுவழியில் இறக்கப்பட்ட நோயாளி பலி!

சாலை விபத்தில் காயமடைந்த முதிவரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவர் கீழே இறக்கப்பட்டுள்ளார். இதனால் அம்முதியவர் உயிர் இழந்துள்ளார்!

Last Updated : Mar 26, 2018, 05:00 PM IST
Ambulance-ல் இருந்து நடுவழியில் இறக்கப்பட்ட நோயாளி பலி! title=

சாலை விபத்தில் காயமடைந்த முதிவரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவர் கீழே இறக்கப்பட்டுள்ளார். இதனால் அம்முதியவர் உயிர் இழந்துள்ளார்!

கேரளா மாநிலத்தில் பாலக்காடு அருகிலுள்ள நட்டுகல் என்ற பகுதியில் முதியவர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், அவரை தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றில் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட அவர் வழியில் வாகனத்திலேயே வாந்தி மற்றும் சிறுநீர் கழித்ததினால் பாதி வழியில் இறக்கிவிடப் பட்டுள்ளார். 

இதனால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக, மருத்துவமையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிர் இழந்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கையில் "வாகனத்தினை சுத்தம் செய்யவே அவரை கீழே இறக்கினோம்" என தெரிவித்துள்ளனர். 

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேண்டும் எனவே அவரை கீழே இறக்கிச் சென்றுள்ளனர். எனினும் மற்றொரு ஆம்புலன்ஸில் அவர் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப் பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் என தெரிவிக்கின்றனர்!

இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் மீது நட்டுகல் பகுதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Trending News