தமிழகத்தில் 5 ரயில் நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோதி

2022, மே 26ம் தேதியன்று தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோதியை தமிழக அமைச்சர்களும், ஆளுநரும் நேரில் சென்று வரவேற்றனர்.  இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி மக்கள் நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதில் சில புகைப்படங்களாக...  .

1 /8

சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேஸ்வரம் & கன்னியாகுமரி நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட பயணிகள் வசதிகளுடன், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக  மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.

2 /8

புதுப்பிக்கப்பட்ட நிலையங்களில், எஸ்கலேட்டர்கள், லிஃப்ட்கள், படிக்கட்டுகள் மற்றும் ஸ்கைவாக்குகள் என மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் பயணிகளுக்கு வசதிகளை வழங்கும்

3 /8

ஐந்து ரயில் நிலையங்கள் மறுவடிவமைக்கப்பட்டன. இந்த நவீனமயமாக்கல் மற்றும் மேம்பாடு எதிர்கால தேவைகளை மனதில் கொண்டு செய்யப்படுகிறது. அதே நேரத்தில், இது உள்ளூர் கலை மற்றும் கலாச்சாரத்துடன் இணைக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

4 /8

உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த நாடுகள் வளரும் நாடுகளில் இருந்து வளர்ந்த நாடுகளுக்கு மாறியது என்பது வரலாறு. உயர்தரம் மற்றும் நிலையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் இந்திய அரசு முழு கவனம் செலுத்துகிறது என்று நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி கூறினார்.

5 /8

அடுத்த 40 ஆண்டுகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உலகத் தரத்திற்கு இணையாக ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்வதே நோக்கம்.

6 /8

காட்பாடி ரயில் நிலைய மறுவடிவமைப்பு மாதிரி

7 /8

ராமேசுவரம் ரயில் நிலையத்தின் மறுவடிவமைப்பு மாதிரி

8 /8

மதுரை ரயில்வே ஸ்டேஷன் மறுவடிவமைப்பு மாதிரி