வாழ்க்கை முழுவதும் தோல்வியா... இந்த 6 பழக்கங்கள் தான் காரணம் - மாத்திங்கோங்க மக்களே!

வாழ்க்கையில் வெற்றிகரமான மனிதராக முன்னேறமடைய இந்த 6 பழக்கவழக்கங்கள் உங்களிடம் இருந்தால் அதனை உடனடியாக கைவிட வேண்டும்.

  • May 10, 2024, 18:10 PM IST

வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்றால் பெரிய பெரிய சாதனைகள் செய்ய வேண்டும் என்பதில்லை, நீங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில் அடைய நினைத்த கனவுகளை அடைந்துவிட்டாலே அது வெற்றிதான்.

 

1 /7

எந்த விஷயத்தை எடுத்தாலும் அதனை பின்னாடி பார்த்துக்கொள்ளலாம் என தள்ளிப்போடும் பழக்கம் இருந்தால் அது மிக மிக ஆபத்து. இந்த பழக்கத்தை உடனடியாக கைவிட்டு, கொஞ்சமாக உங்களின் வேலையில் கவனம் செலுத்த வேண்டும்.   

2 /7

ஒரு முயற்சியை நீங்கள் மேற்கொள்கிறீர்கள் என்றால் அதில் ஒரு கட்டத்தில் ஏதாவது பின்னடைவு ஏற்படுகிறது என்றால் உடனடியாக அதில் இருந்து பின்வாங்காதீர்கள். நீண்ட கால செயல் திட்டத்தை யோசித்து தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்  

3 /7

முயற்சித்து பார்ப்பதுதான் வெற்றியின் முதல்படி. அந்த வகையில், ஒரு விஷயத்தை செய்தால் தோல்வியடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் முயற்சியில் செய்யாமல் இருப்பதும், புதிய விஷயங்களுக்கு தலைக்கொடுக்காமல் பதுங்குவதும் தோல்விக்கே ஈட்டுச் செல்லும்.   

4 /7

உங்களின் தனிப்பட்ட வளர்ச்சி குறித்து எப்போதும் யோசியுங்கள். அதைவிடுத்து அன்றாடம் வேலையை மட்டும் கடிவாளம் கட்டிய குதிரையாக பின்பற்றுவது உதவவே உதவாது. எனவே, உங்களின் சுய முன்னேற்றத்திற்கு தினமும் நேரம் ஒதுக்குங்கள்.

5 /7

மேலும், கடந்த காலத்தை பற்றியே யோசித்து நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பாழாக்கக் கூடாது. கடந்த கால வாழ்க்கையில் நடந்ததை மட்டும் யோசித்துக்கொண்டிருப்பதும் ஆபாயமான பழக்கமாகும்.   

6 /7

முக்கியமாக உங்களுக்கு ஏற்படும் தற்காலிக தோல்விகளுக்கும், பின்னடைவுகளுக்கும் வேறு யாரையும் குற்றம் கூறுவதும் ஏற்கத்தக்கது இல்லை. அனைத்திற்கும் முழு பொறுப்பை ஏற்று அதனை பகுப்பாய்வு செய்து தவறுகளை சரிசெய்ய வேண்டும்.   

7 /7

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை கொண்டு எழுதப்பட்டது. எனவே, இந்த தகவலுக்கு Zee News பொறுப்பேற்காது.