Shani Vakra Nivarthi: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தங்கள் ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றத்தால் உருவாகும் யோகங்கள் சில ராசிகளுக்கு சுபமாகவும், சில ராசிகளுக்கு பிரச்சனைகளை அளிக்கும் வகையிலும் அமைகின்றன.
இப்போது சனி பகவான் ஷஷ மஹாபுருஷ ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த யோகம் பல ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அனைத்து கிரகங்களிலும் சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். சனி இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை ராசி மாறுகிறார். சனி முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்ப ராசியில் வக்ர நிலையில் உள்ளார். அவர் நவம்பர் 4 ஆம் தேதி வகர் நிவர்த்தி அடைவார். இதனால் நல்ல பலன்களை காணவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனி பகவான்: கிரகங்களில் முக்கியமான கிரகமாக கருதப்படும் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரமாக உள்ளார். இதனால் இவரது தாக்கம் அனைத்து ராசிகளிலும் அதிகமாக இருக்கும்.
சனி வக்ர நிவர்த்தி: சனி முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்ப ராசியில் வக்ர நிலையில் உள்ளார். அவர் நவம்பர் 4 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைவார்.
ஷஷ மகாபுருஷ ராஜயோகம்: சனி வக்ர நிவர்த்தி அடைவதால் ஷஷ மகாபுருஷ ராஜயோகம் உருவாகிறது. இது மிகவும் சக்திவாய்ந்த யோகமாக கருதப்படுகின்றது. இது ஏழரை நாட்டு சனியால் உருவான துன்பங்களிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
ராசிகளில் தாக்கம்: சனி வக்ர பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ மகாபுருஷ ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் 3 ராசிக்காரர்களுக்கு இது அதிக நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கும்ப ராசியில் சனியின் வகர் நிவர்த்தி சாதகமாக இருக்கும். ஷஷ ராஜயோகத்தின் மூலம், உங்கள் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், மேலும் உங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெற்று அதன் மூலம் அதிகப் பணம் பெறுவீர்கள்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தியால் உருவாகும் ஷஷ ராஜயோகம் நல்ல செய்திகளை அளிக்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கையும் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி ஆதாயங்கள் இருக்கும்.
கும்பம்: சனியின் வக்ர நிவர்த்தி கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களை தொடக்கி வைக்கும். கும்ப ராசிக்கு அதிபதியான சனி இந்த நேரத்தில் இந்த ராசியில்தான் உள்ளார். கும்ப ராசியில் சனி சஞ்சரிப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை, வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.