Belly Fat: தொப்பையை வேகமா குறைக்கணுமா? இந்த 5 விஷயங்களை செஞ்சா போதும்!!

Weight Loss Tips: மோசமான வாழ்க்கை முறை, ஃபாஸ்ட் புட், போதிய உடற்பயிற்சியின்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. நீங்களும் தொப்பை பிரச்சனை அல்லது கொழுப்பு அதிகரிப்பால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இது உங்களுக்கான பதிவு. இவற்றை குறைக்க நீங்கள் ஜிம்மிற்கு கூட செல்ல வேண்டிய அவசியமில்லை. காலையில் எழுந்தவுடன் சில குறிப்பிட்ட வேலைகளை செய்தால், அது உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதோடு, நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். கடின உழைப்பு இல்லாமல் உடல் எடையை குறைக்கக்கூடிய வழிகளைப் பற்றி இங்கே காணலாம்.

1 /5

காலையில் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். முடிந்தால் ஒரு கிளாஸ் வெந்நீரை குடிக்கவும். இது உங்கள் கலோரிகளையும் கொழுப்பையும் வேகமாக எரிக்கும். இது தவிர, உங்கள் உடலும் நீரேற்றமாக இருக்கும். மிக விரைவில் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறைந்து, உடல் வடிவம் பெறும்.

2 /5

காலை உணவுக்கு முட்டை மற்றும் பால் போன்ற புரதம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காது என்பது பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனுடன், காலை உணவின் அளவை குறைக்கக்கூடாது. காலை சிற்றுண்டுயை வயிறு நிரம்ப எடுத்துக்கொள்ள வேண்டும். 

3 /5

காலை உணவுக்கு முட்டை மற்றும் பால் போன்ற புரதம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காது என்பது பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனுடன், காலை உணவின் அளவை குறைக்கக்கூடாது. காலை சிற்றுண்டுயை வயிறு நிரம்ப எடுத்துக்கொள்ள வேண்டும். 

4 /5

உடல் எடையை குறைக்க, உங்கள் எடையை அடிக்கடி பரிசோதிக்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் உடல் எடையை குறைக்க நீங்கள் தொடர்ந்து உந்துதல் பெறுவீர்கள்.

5 /5

உடல் எடையை குறைக்க, மிகவும் கடினமான உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்வதை தவிர்த்து, தினமும் காலையில் தியானம் செய்வதை பழக்கப்படுத்துங்கள். இதன் மூலம், படிப்படியாக ஆனால் கணிசமான வித்தியாசம் உங்கள் எடையில் தெரிய ஆரம்பிக்கும். உங்கள் எடையில் மட்டுமல்ல, இது உங்கள் சருமம் மற்றும் மன ஆரோக்கியத்திலும் சாதகமான விளைவை ஏற்படுத்தும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)