Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்.
Weight Loss Tips: உடலின் பல பாகங்களில் சேரும் கொழுப்பினால் உடல் பருமன் அதிகரிப்பதோடு பல வித நோய்களுக்கும் இது காரணமாகின்றது. ஆகையால் இதை உடனடியாக சரி செய்வது மிக அவசியம். கோடை காலத்தில் எடை இழப்புக்கு சற்று வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது. இதில் நமது காலை நேர செயல்முறைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க நாம் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்புக்கு மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் ஒன்றாகும். கோடையில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அதிகாலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து, செரிமானத்தை சீராக்கி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். ஊறவைத்த சியா விதைகள் தண்ணீர், ஓம நீர், வெந்நீர், எலுமிச்சை நீர், வெந்தய நீர் போன்றவை வளர்சிதை மாற்றத்தைத் தூண்டவும், செரிமானத்திற்கு உதவவும், உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவும்.
தூக்கம்; தினமும் 7-8 மணி நேர உறக்கம் மிக அவசியமாகும். இதை விட குறைவான நேரத்திற்கு தூங்குபவர்களில் உடல் பருமன் அதிகம் காணப்படுவதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
உடற்பயிற்சி: வீட்டில் தொப்பை கொழுப்பை எரிக்கும் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். அதிகாலை நடைப்பயிற்சி, ஜாகிங், யோகா அல்லது HIIT போன்ற தீவிர பயிற்சிகள் விரைவான கொழுப்பு இழப்பை ஊக்குவிக்கிறது. தினமும் முழு முனைப்புடன் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்றினால், கலோரிகளை வேகமாக எரிக்கலாம்.
காலை உணவு: காலை உணவில் அதிக புரதச்சத்து இருப்பதை உறுதிபடுத்துக்கொள்ளுங்கள். தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க புரதங்கள் அவசியம். எடை இழப்பு முயற்சியின் போது, சரியான தசை பராமரிப்பு மிக முக்கியமாகும். புரதச்சத்து நீண்ட நேரத்திற்கு நமது உடலை நிறைவான உணர்வுடன் வைக்கிறது.
10 நிமிட தியானம்: தியானம் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோலின் வெளியீட்டிற்கு வழிவகுக்கிறது. இது எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. 10 நிமிட காலை தியானம் மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், தொப்பை கொழுப்பைக் கரைக்கவும் உதவும்.
உணவு திட்டமிடல்: நான் உட்கொள்ளும் உணவின் கட்டுப்பாடு மற்றும் உணவு திட்டமிடல் ஆகியவை ஆரோக்கியமற்ற பசியைக் குறைக்க உதவும். அடுத்து வேளை என்ன சாப்பிட வேண்டும் என்பதை நாம் முன்னரே திட்டமிட்டால் ஆரோக்கியமான தேர்வுகளை எடுக்க இது உதவும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஆரோக்கியமான மனப்போக்கும் அவசியமாகும். நாம் உடல் எடையை குறைக்க டயட் பிளான், ஜிம் என பல திட்டங்களை தீட்டினால் மட்டும் போதாது. இதில் நாம் அதிகப்படியான அர்ப்பணிப்பையும் நிலைத்தன்மையையும் காட்ட வேண்டும். அப்போதுதான் எடை இழப்புக்கான நமது கனவு நிஜமாகும்.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.